மஹிந்திரா ஸ்கார்ப்பியோ எஸ்யூவிகளுக்கு ரீகால் அறிவிப்பு

By Saravana

தொழில்நுட்ப பிரச்னை இருப்பதாக கருதப்படும் பாகத்தை மாற்றி தருவதற்காக 900 ஸ்கார்ப்பியோ எஸ்யூவிகளை மஹிந்திரா திரும்ப அழைத்துள்ளது.

கடந்த அக்டோபர் முதல் நவம்பர் மாதங்களில் தயாரிக்கப்பட்ட 900 ஸ்கார்ப்பியோ எஸ்யூவிகளில் எஞ்சினின் ப்ரஷர் ரெகுலேட்டர் வால்வில் பிரச்னை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

Mahindra Scorpio

இதையடுத்து, பிரச்னைக்குரியதாக கருதப்படும் ஸ்கார்ப்பியோ இஎக்ஸ் வேரியண்ட் எஸ்யூவிகளை தானாக முன்வந்து திரும்ப பெறுவதாக மஹிந்திரா அறிவித்துள்ளது.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்களை தொடர்பு கொண்டு வருவதாகவும், பிரச்னைக்குரிய பிரஷர் ரெகுலேட்டர் வால்வு இலவசமாக மாற்றித் தரப்படும் என்றும் அந்த நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் மாருதி நிறுவனம் கார்களை திரும்ப பெறுவதாக அறிவித்த நிலையில், தொடர்ந்து மஹிந்திராவும் கார்களை திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளது.

பல முன்னணி நிறுவனங்கள் தொடர்ந்து கார்களை தானாக முன்வந்து திரும்ப பெறுவதாக அறிவித்து வரும் நிலையில், தயாரிப்பு குறைபாடு உள்ள கார்களை திரும்ப பெறுவதற்கான நடைமுறைகளை கட்டாயமாக்குவதற்கு மத்திய கனரக தொழிற்துறை அமைச்சகம் தீவிரமாக இறங்கியுள்ளது.

Most Read Articles
Story first published: Friday, December 6, 2013, 10:25 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X