எக்ஸ்யூவியை தொடர்ந்து தார் குறைகளை களைந்த மஹிந்திரா!

By Saravana

எக்ஸ்யூவி 500வை தொடர்ந்து வாடிக்கையாளர்களின் கருத்துக்களின் அடிப்படையில் தார் எஸ்யூவியில் சில மாற்றங்களை செய்துள்ளது மஹிந்திரா. ஆஃப் ரோடு விரும்பிகளுக்கான சிறந்த எஸ்யூவியாக தார் விளங்குகிறது.

இந்த நிலையில், தார் எஸ்யூவியில் சில குறைபாடுகள் இருந்து வந்தன. இதனை சரி செய்யுமாறு மஹிந்திராவுக்கு வாடிக்கையாளர்களிடமிருந்து கருத்துக்கள் அனுப்பப்பட்டன. இதனையடுத்து, தார் எஸ்யூவியை மேம்படுத்தியிருக்கிறது மஹிந்திரா. என்னென்ன மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன என்பதை ஸ்லைடரில் காணலாம்.

ஏசி சுவிட்ச்

ஏசி சுவிட்ச்

சென்ட்ரல் கன்சோலில் கொடுக்கப்பட்டிருந்த தரமற்ற ஏசி சுவிட்சுகளுக்கு பதிலாக புதிய ஏசி சுவிட்சுகள் பொருத்தப்பட்டுள்ளன. தரமான கதவு கைப்பிடிகளும் கொடுக்கப்பட்டுள்ளன.

ஹெட்ரூம் அதிகரிப்பு

ஹெட்ரூம் அதிகரிப்பு

பின்புற இருக்கையின் உயரம் 6 மிமீ வரை குறைக்கப்பட்டு, பயணிகளுக்கு அதிக ஹெட்ரூம் கிடைக்க வழி செய்யப்பட்டுள்ளது.

முன்புற கூரை

முன்புற கூரை

முன்புற கூரையை ஸ்குரூ மூலம் எளிதாக கழற்றும் வகையில் வசதி செய்யப்பட்டுள்ளது.

 புதிய கிராஸ் பார்

புதிய கிராஸ் பார்

ஏ மற்றும் பி பில்லர்களுக்கு நடுவில் கிராஸ் பாருடன் வலு சேர்க்கப்பட்டுள்ளது.

 எஞ்சின்

எஞ்சின்

மஹிந்திரா தாரில் 105 பிஎச்பி ஆற்றலையும், 250 என்எம் டார்க்கையும் அளிக்கும் 2.5 லிட்டர் சிஆர்டிஇ டர்போ டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் இயைந்து பணிபுரியும். மேம்படுத்தப்பட்ட தார் விலை அதிகரிக்கப்படுமா அல்லது இல்லை

Most Read Articles
English summary
Mahindra Thar, while a capable SUV and is favoured by enthusiasts, has had a few complaints. Most of these are concerning its poor quality interior. In a move that will be much appreciated by buyers, Mahindra has listened to all the feedback given by existing owners and has updated the Thar.
Story first published: Friday, September 13, 2013, 16:25 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X