நேபாள அரசுக்கு 630 மஹிந்திரா எஸ்யூவிகளை பரிசாக வழங்கும் இந்தியா

நேபாள நாட்டில் நடைபெற உள்ள பொதுத் தேர்தலுக்காக 630 மஹிந்திரா எஸ்யூவி ரக கார்களை மத்திய அரசு பரிசாக வழங்க உள்ளது.

வரும் 19ந் தேதி அண்டை நாடான நேபாளத்தில் பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தல் சிறப்பாக நடைபெற வேண்டும் என்ற நல்லெண்ண அடிப்படையில் 630 கார்களை மத்திய அரசு வழங்க உள்ளது.

Mahindra Scorpio

மஹிந்திராவின் ஸ்கார்ப்பியோ மற்றும் பொலிரோ எஸ்யூவிகள் பரிசாக வழங்கப்பட உள்ளன. இந்த வாகனங்கள் நேபாள நாட்டின் பாதுகாப்புப் படை, காவல் துறை மற்றும் ஆயுதப்படை போலீசார் உள்ளிட்ட பல பாதுகாப்புப் பிரிவுகளில் தேர்தல் பணிக்காக பயன்படுத்தப்படும்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த மஹிந்திரா ஆட்டோமோட்டிவ் சர்வதேச விவகாரங்களுகக்கான தலைமை அதிகாரி ரூபேஸ் இரானி கூறுகையில்,"மஹிந்திரா வாகனங்களை நேபாள அரசு தேர்வு செய்திருப்பது மிகுந்த பெருமிதம் தருகிறது.

நேபாள நாட்டின் வரலாற்று சிறப்புமிக்க பொதுத் தேர்தலில் மஹிந்திரா வாகனங்கள் ஈடுபடுத்தப்பட உள்ளது மிக்க மகிழ்ச்சியை தருகிறது. இது இருநாட்டு உறவை பலப்படுத்தும் விஷயத்தில் மஹிந்திராவும் பங்கெடுப்பது பெருமைக்குரியது," என்றார்.

Most Read Articles
English summary
November 19, 2013 will be an extremely important day for everyone in Nepal as the Constitutional Assembly elections are to be held in the country. As a gesture of support and token of goodwill Government of India has taken the decision to gift 630 Mahindra vehicles to Nepal.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X