பாதுகாப்பு தர சோதனையில் பூஜ்யம் வாங்கிய ஆல்ட்டோ கே10 கார்

Maruti Alto K10
லத்தீன் என்சிஏபி என்ற அமைப்பால் நடத்தப்பட்ட பாதுகாப்பு சோதனையில் மாருதி ஆல்ட்டோ கே10 கார் ஒரு நட்சத்திர அந்தஸ்தை கூட பெற முடியாமல் பூஜ்யம் வாங்கியிருக்கிறது.

லத்தீன் அமெரிக்க நாடுகளில் இந்தியாவில் தயாரிக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்படும் ஆல்ட்டோ கே10 கார்தான் விற்பனை செய்யப்படுகிறது.

அங்குள்ள லத்தீன் என்சிஏபி(Latin NCAP) என்ற அமைப்பு காரில் பயணிகளுக்கு எந்தளவுக்கு பாதுகாப்பு அம்சங்கள் இருக்கிறது என்பதை கிராஷ் டெஸ்ட் செய்து பார்த்து நட்சத்திர அந்தஸ்தை வழங்கி வருகிறது.

அதிகபட்சமாக 5 நட்சத்திர அந்தஸ்து வழங்கப்படும். இந்த நிலையில், அந்த அமைப்பு சமீபத்தில் ஆல்ட்டோ கே10 காரை கிராஷ் டெஸ்ட்டுக்கு உட்படுத்தியது.

அதில், படுமோசமாக சேதமடைந்த ஆல்ட்டோ கே10 கார் 5 நட்சத்திர அந்தஸ்தில் ஒரு நட்சத்திர அந்தஸ்தை கூட பெறாமல் பூஜ்யம் வாங்கியது.

நம் நாட்டு கார் மார்க்கெட்டில் அதிகம் விற்பனையாகும் கார் மாடலான ஆல்ட்டோ கே10 பாதுகாப்பு சோதனையில் பூஜ்யம் அடித்திருப்பது வாடிக்கையாளர் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

Most Read Articles
English summary
Country's largest selling car model Maruti Alto K10 did not score at all in the Latin NCAP. The small wonder scored a zero out of five-stars rating for poor occupant safety. 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X