அமேஸை சமாளிக்க டிசையர் பிரபலத்துக்கு முக்கியத்துவம் தரும் மாருதி

Maruti Dzire
ஹோண்டா அமேஸ் வருகையால் மாருதி நெருக்கடிக்கு ஆளாகியிருப்பது கண்கூடாக வெளிப்பட்டுள்ளது. இதுவரை ஸ்விப்ட், டிசையர் கார்களுக்கு சலுகை என்ற வார்த்தையை பெயரளவுக்கு கூட பயன்படுத்தாக கடந்த மாதம் சிறப்பு சலுகைககளை அறிவித்தது.

மேலும், கூடுதல் ஆக்சஸெரீஸ்களுடன் ரீகல் என்ற ஸ்பெஷல் எடிசன் டிசையர் காரையும் விற்பனைக்கு கொண்டு வந்தது. இத்தோடு நில்லாமல் தற்போது அடுத்த வியாபார யுக்தியையும் கையிலெடுத்துள்ளது. அதாவது, வாடிக்கையாளர்களின் கவனத்தை கவர்வதற்காக மைலேஜ் டிரைவ் ராலி என்ற பெயரில் டிசையர் காருக்கு சிறப்பு நிகழ்ச்சியை நடத்தியுள்ளது.

நாடு முழுவதும் உள்ள 31 நகரங்களில் டிசையர் மைலேஜ் டிரைவ் ராலி நேற்று நடந்தது. அதில், 2,100 பேர் கலந்து கொண்டனர். அதிக எரிபொருள் சிக்கனம் தரும் வகையில் ஓட்டுபவரை தேர்ந்தெடுக்கும் விதமாக இப்போட்டி நடத்தப்பட்டது.

இதில், மும்பையில் கலந்து கொண்ட 105 போட்டியாளர்களின் மைலேஜ் விபரப்படி, டீசல் மாடல் 30.9 கிமீ மைலேஜையும், பெட்ரோல் மாடல் 26.63 கிமீ மைலேஜையும் கொடுத்ததாக மாருதி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மாருதி நிறுவனத்தின் துணைத் தலைவர் மனோஹர் பட் கூறியிருப்பதாவது," எல்லா செக்மென்ட்டிலும் போட்டி இருக்கிறது. போட்டியை மனதார வரவேற்கிறோம். ஆனால், எங்களது கார்கள் பெர்ஃபார்மென்சை காட்டி பேசுகின்றன.

மேலும், டிசையர் கார் அறிமுகம் செய்யப்பட்டு 5 ஆண்டுகள் ஆவதை கொண்டாடும் விதத்திலேயே மைலேஜ் ராலிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதன்மூலம் வாடிக்கையாளர்களுடனான பிணைப்பு அதிகரிக்கும்.

டிசையர் அறிமுகம் செய்யப்பட்டு 5 ஆண்டுகள் ஆனாலும் தொடர்ந்து மார்க்கெட் லீடராக இருந்து வருகிறது. இதுவரை 5.5 லட்சம் டிசையர் கார்களை விற்பனை செய்துள்ளோம். ," என்றார்.

சரிதான்!!!

Most Read Articles
English summary
To avert the Honda Amaze competition, Maruti Suzuki has conducted "mileage drive rally" for its entry level sedan Dzire across 31 cities today. 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X