மினி டிரக்கை அறிமுகப்படுத்த மாருதி ஆயத்தம்: ஏற்றுமதிக்கும் திட்டம்

By Saravana
Suzuki Carry Mini Truck
டாடா ஏஸ், மஹிந்திரா மேக்ஸிமோ ஆகிய மினி டிரக் வாகனங்களுக்கு போட்டியாக புதிய மினி டிரக்கை மாருதி கார் நிறுவனம் அறிமுகம் செய்ய இருக்கிறது.

மாருதி நிறுவனம் மினி டிரக் சந்தையில் கால் பதிக்க இருப்பதாக ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்தோம். இதனை அந்த நிறுவனத்தின் தலைவர் ஆர்.சி.பர்கவா இப்போது உறுதிப்படுத்தியிருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறுகையில்," மினி டிரக் சந்தை அதிவேகமாக வளர்ந்து வருகிறது. எனவே, அந்த மார்க்கெட்டிலும் விரைவில் களமிறங்குகிறோம்.

மேலும், ஆப்ரிக்கா, மத்திய கிழக்கு நாடுகளுக்கும் மினி டிரக் ஏற்றுமதி செய்யும் பொறுப்பை எங்களிடமே சுஸுகி விட்டுள்ளது. எனவே, புதிதாக அமைக்கப்பட்டு வரும் குஜராத் ஆலையில் மினி டிரக் உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளோம்.

ஆனால், அந்த ஆலை செயல்பட துவங்குவதற்கு இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் பிடிக்கும். எனவே, மானேசர் ஆலையில் அமைக்கப்பட்டு வரும் மூன்றாவது உற்பத்தி பிரிவில், மினி டிரக் தயாரிப்புக்கு தனி உற்பத்தி பிரிவை துவங்க முடிவு செய்துள்ளோம்," என்றார்.

நாட்டின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமாக திகழ்ந்து வரும் மாருதி இலகு ரக வர்த்தக வாகனப் பிரிவிலும் களமிறங்குவது பிற நிறுவனங்களுக்கு கடும் போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒய்9டி என்ற பெயரில் தனது முதல் மினி டிரக்கை மாருதி வடிவமைத்து வருகிறது.

உள்நாட்டு தேவை தவிர ஆப்ரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு மினி டிரக்கை மாருதி ஏற்றுமதி செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Most Read Articles
English summary
India's largest car maker Maruti Suzuki has plans to foray into the light commercial vehicles market.
Story first published: Monday, June 10, 2013, 11:07 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X