17 மாதங்களில் ஒரு லட்சம் எர்டிகா கார்கள் விற்பனை - விபரம்

By Saravana

17 மாதங்களில் ஒரு லட்சம் மாருதி எர்டிகா எம்பிவி கார்கள் விற்பனையாகி புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. ஹேட்ச்பேக் கார் மார்க்கெட்டை தாண்டி வெளியே வந்த மாருதியின் முதல் எம்பிவியாக எர்டிகா வந்தது.

கடந்த ஆண்டு ஏப்ரலில் வந்த மாருதி எர்டிகாவுக்கு வாடிக்கையாளர்கள் தொடர்ந்து பேராதரவு வழங்கி வருகின்றனர். கடந்த ஏப்ரலில் 70,000 கார்கள் விற்பனையாகியிருந்த நிலையில், கடந்த 31ந் தேதி வரை 1,01,041 எர்டிகா கார்களை மாருதி விற்பனை செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. எர்டிகாவின் வெற்றிக்கு காரணமான முக்கிய அம்சங்களை ஸ்லைடரில் காணலாம்.

 எஞ்சின்

எஞ்சின்

1.4 லிட்டர் கே-14 விவிடி பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.3 லிட்டர் டிடிஐஎஸ் சூப்பர் டர்போ எஞ்சினுடன் எர்டிகா கிடைக்கிறது. பெட்ரோல் எஞ்சின் 6,000 ஆர்பிஎம் எஞ்சின் சுழல்வேகத்தில் 93.7 பிஎச்பி ஆற்றலையும், டீசல் எஞ்சின் 6,000 ஆர்பிஎம் எஞ்சின் சுழல் வேகத்தில் 88.7 பிஎச்பி ஆற்றலையும் வெளிப்படுத்தும்.

 வடிவம்

வடிவம்

4265 மிமீ நீளம், 1,695 மிமீ அகலம் மற்றும் 1,685 மிமீ உயரமும் கொண்ட காம்பெக்ட் காராக வரும் எர்டிகாவில் 7 பேர் அமர்ந்து செல்ல ஏதுவாக சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால், மூன்றாவது வரிசையில் சிறியவர்களுக்கு ஏதுவாக இருக்கிறது. எர்டிகா 2,740 மிமீ வீல் பேஸ் கொண்டதாகவும் இருப்பதால் உட்புறத்தில் தாராள இடவசதி இருக்கிறது. 15 இஞ்ச் அலாய் வீல்கள் எர்டிகாவின் எடுப்பை கூட்டுகிறது.

 இன்டிரியர்

இன்டிரியர்

உயர்தர தோற்றத்தை தரும் வகையில் எர்டிகாவின் உட்புறத்தை மிக கவனமாக மெருகேற்றியுள்ளது மாருதி. 3 ஸ்போக்ஸ் எலக்ட்ரிக் பவர் ஸ்டீயரிங், ட்வின் ஏசி, யுஎஸ்பி போர்ட்டுடன் கூடிய ஆடியோ சிஸ்டம், ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கன்ட்ரோல் சுவிட்சுகள் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன.

இதர வசதிகள்

இதர வசதிகள்

சென்ட்ரல் டோர் லாக்கிங், கீ லெஸ் என்ட்ரி மற்றும் மல்டி இன்பர்மேஷன் டிஸ்ப்ளே, பவர் விண்டோஸ், ஆட்டோமேட்டிக் ரியர் வியூ மிரர்கள் என ஏராளமான நவீன வசதிகளை எர்டிகா கொடுக்கும்.

 இருக்கை அமைப்பு

இருக்கை அமைப்பு

7 பேர் அமர்ந்து செல்லும் வசதிகொண்ட எர்டிகாவில் முதல் வரிசை இருக்கையில் 2 பேரும், இரண்டாவது இருக்கையில் 3 பேரும், கடைசியில் மூன்றாவது வரிசை இருக்கையில் 2 பேரும்(2 3 2) அமர்ந்து செல்லும் வகையில் அமைக்கப்பட்டிருக்கிறது.

பயன்பாடு

பயன்பாடு

அலுவலகம் செல்ல தினசரி பயன்பாடு, வார கடைசியில் வெளியில் செல்லவும், வெளியூர் மற்றும் வர்த்தக பணிகளுக்காக பயன்படுத்தும் வகையில் ஓர் முழுமமையான காராக எர்டிகா எம்பிவி இருக்கிறது.

 மைலேஜ்

மைலேஜ்

7 பேர் செல்லும் வசதிகொண்ட எர்டிகாவின் பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 16.02 கிமீ மைலேஜையும், டீசல் மாடல் லிட்டருக்கு 20.77 கிமீ மைலேஜையும் கொடுக்கும் என மாருதி தெரிவித்துள்ளது. இதனால், பொருளாதார ரீதியிலும் சிக்கனமான காராக எர்டிகா இருப்பதாக மாருதி அடித்து கூறுகிறது.

விலை விபரம்

விலை விபரம்

பெட்ரோல்

எல்எக்ஸ்ஐ - ரூ.7,38,192

விஎக்ஸ்ஐ- ரூ.8,06,007

இசட்எக்ஸ்ஐ - ரூ.8,88,442

டீசல்

எல்டிஐ - ரூ.9,07,008

விடிஐ - ரூ.9,70,916

இசட்டிஐ - ரூ.10,27,547

Most Read Articles
Story first published: Thursday, September 19, 2013, 11:49 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X