ஸென் எஸ்டீலோ உற்பத்தியை நிறுத்த மாருதி முடிவு

By Saravana
Maruti Estilo
என்ன செய்தும் விற்பனை ஏற்றம் பெறாததால் ஸென் எஸ்டீலோ கார் உற்பத்தியை நிறுத்திவிட மாருதி முடிவு செய்துள்ளது.

சிறிய கார் மார்க்கெட்டில் மாருதி நிறுவனம்தான் அதிக மாடல்களை கைவசம் வைத்திருக்கிறது. ஆல்ட்டோ, வேகன்-ஆர் உள்ளிட்ட மாடல்கள் விற்பனையில் நல்ல எண்ணிக்கையை பதிவு செய்து வந்தாலும், சில மாடல்கள் அந்த நிறுவனத்துக்கு எதிர்பார்த்த அளவு விற்பனை எண்ணிக்கையை தரவில்லை.

எனவே, விற்பனையில் போனியாகாத மாடல்களுக்கு முடிவு கட்ட மாருதி முடிவு செய்துள்ளது. அந்த வகையில், கிசாஷி பிரிமியம் கார் விற்பனையை நிறுத்திவிட மாருதி முடிவு செய்தது. அந்த வரிசையில், அடுத்ததாக எஸ்டீலோ இடம்பெற்றிருக்கிறது.

வரும் மார்ச் துவக்கத்தில் எஸ்டீலோ உற்பத்தியை நிறுத்த மாருதி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதுதவிர, ஏ-ஸ்டார் காரின் உற்பத்தியையும் குறைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ரூபாய் மதிப்பில் ஏற்ற இறக்கத்தால் வருவாயில் இழப்பு ஏற்பட்டு வருவதை தவிர்க்கும் விதமாக இந்த நடவடிக்கைகளை மாருதி மேற்கொண்டுள்ளது.

Most Read Articles
English summary
According to the reports, Maruti will probably end Zen Estilo’s journey as early as March 2013, when the ongoing FY ends.
Story first published: Monday, January 28, 2013, 17:00 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X