கார் ஏற்றுமதியில் ஹூண்டாயை விஞ்ச மாருதி தீவிர முயற்சி

Suzuki Alto
ஏற்றுமதியில் ஹூண்டாய் நிறுவனத்தை விஞ்சி முதலிடத்தை பிடிப்பதற்கான முயற்சிகளை தீவிரப்படுத்தியிருக்கிறது மாருதி.

நாட்டின் ஒட்டுமொத்த கார் விற்பனையில் பாதியளவு இருக்கும் மாருதி நிறுவனம் ஏற்றுமதியில் இரண்டாம் இடத்தில் இருக்கிறது. ஹூண்டாய்தான் ஏற்றுமதியில் நம்பர்-1 ஆக இருந்து வருகிறது.

ஏற்றுமதியை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தும் மாதத்திற்கு மாதம் மாருதியின் ஏற்றுமதி சரிவிலேயே முடிகிறது. இந்த விஷயத்தில் ஹூண்டாயை விஞ்ச முடியாமல் மாருதி திணறி வருகிறது.

இந்த நிலையில், இந்தியாவின் நம்பர்-1 கார் ஏற்றுமதியாளர் அந்தஸ்தை பெறுவதற்கான முயற்சிகளை இன்னும் தீவிரப்படுத்தியிருக்கிறது மாருதி. இந்த முறை விடப்போவதில்லை என்ற முடிவுடன் இறங்கியிருக்கும் மாருதி அடுத்த 5 ஆண்டுகளில் அந்த இடத்தை பிடிக்க திட்டமிட்டுள்ளது.

குறிப்பாக, குஜராத்தில் கட்டப்போகும் ஆலையை வைத்து உள்நாட்டு தேவையை சரியாக பூர்த்தி செய்யும் அதேவேளையில், ஏற்றுமதியிலும் முக்கியத்துவம் தரும் வகையில் உற்பத்தி திறனுடன் கட்டுகிறது. இதற்காக, பெரும் முதலீட்டு திட்டத்துடன் தற்போது மாருதி இறங்கியிருக்கிறது.

ஏற்றுமதியை அதிகரிப்பதற்காக சுஸுகியின் குறைந்த விலை பிராண்டாக மாருதியை பல்வேறு நாடுகளில் அறிமுகப்படுத்த சுஸுகி திட்டமிட்டுள்ளது. இதன்மூலம், ஏற்றுமதியில் நாட்டின் முதன்மை நிறுவனமாக மாறுவதற்கான வாய்ப்பு அதிகாமாகியிருக்கிறது.

Most Read Articles
English summary
Maruti Suzuki, India's largest carmaker, is scripting a strategy to pole-vault itself to become India's largest exporter of passenger cars in next five years.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X