விரைவில் வேகன்- ஆர் டீசல்: கிராண்ட் ஐ10க்கு 'செக்' வைக்கும் மாருதி!

கிராண்ட் ஐ10 காரின் வருகையை சமாளிக்கும் வகையில், விரைவில் வேகன் ஆர் டீசல் மாடலை விற்பனைக்கு கொண்டு வர மாருதி திட்டமிட்டுள்ளது. பண்டிகை காலத்தில் வேகன் ஆர் டீசல் விற்பனைக்கு வர இருப்பதாக டீம் பிஎச்பி தளம் முதன்முறையாக யூக அடிப்படையில் இந்த செய்தியை வெளியிட்டிருக்கிறது.

மாருதி வடிவமைத்து வரும் புதிய 800சிசி டீசல் எஞ்சினுடன் முதலில் ஏ ஸ்டார் கார் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருப்பதாக சமீபத்திய தகவல்கள் கூறின. இந்த நிலையில், கிராண்ட் ஐ10 காரின் வருகை மாருதிக்கு மிகப் பெரிய நெருக்கடியை தரும் என்று தெரிகிறது.

கிராண்ட் ஐ10 காரின் டிசைனுக்கு முன்னால் ஏ ஸ்டார் எந்தளவுக்கு எடுபடும் என்று மாருதிக்கு சந்தேகம் எழுந்துள்ளது. எனவே, கிராண்ட் ஐ10 காரை எதிர்க்க ஒரே வழி வெற்றிகரமான வேகன் ஆரை களமிறக்குவதுதான் என்ற முடிவுக்கு மாருதி வந்துவிட்டது போலும். எனவே, கூடிய விரைவில் வேகன் ஆர் டீசலை மாருதி அறிமுகம் செய்ய உள்ளதாக தெரிகிறது.

 பயிற்சி

பயிற்சி

டீலர் பணியாளர்களுக்கு வேகன் ஆர் டீசல் கார் பற்றிய பயிற்சி வழங்கும் பணிகள் தற்போது நடந்து வருகிறதாம்.

 சோதனை

சோதனை

புதிய 800சிசி டர்போ டீசல் எஞ்சின் பொருத்தப்பட்ட வேகன் ஆர் கார் மிக தீவிரமாக சோதனை செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 மைலேஜ்

மைலேஜ்

வேகன் ஆர் காரில் பொருத்தப்பட்டிருக்கும் டீசல் எஞ்சின் லிட்டருக்கு 25 கிமீ மைலேஜ் தருவதாக அராய் சான்றளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

 வேகன் ஆர் ஸ்டிங்ரே

வேகன் ஆர் ஸ்டிங்ரே

போட்டியாளர்களை சமாளிக்கும் விதமாக வேகன் ஆர் காரின் பிரிமியம் மாடலான ஸ்டிங்ரேவையும் விரைவில் மாருதி விற்பனைக்கு கொண்டு வருகிறது.

குழப்பம்

குழப்பம்

தற்போது விற்பனையில் இருக்கும் மாடலில் டீசல் எஞ்சின் பொருத்தப்படுமா அல்லது ஸ்டிங்ரே வேகன் ஆரில் டீசல் எஞ்சின் பொருத்தப்படுமா என்பது குறித்து சந்தேகம் நிலவுகிறது.

அறிமுகம்

அறிமுகம்

வேகன் ஆர் டீசல் வருகை பற்றி ஏற்கனவே நாம் பலமுறை செய்தி வெளியிட்டிருந்தோம். இந்த நிலையில், பண்டிகை காலத்தில் வேகன் ஆர் டீசல் மாடலை விற்பனைக்கு கொண்டு வர மாருதி திட்டமிட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Most Read Articles
English summary
Country's largest car maker Maruti Suzuki India is ready to launch Wagon R diesel model in indian market by this Festive season, Team BHP report says.
Story first published: Tuesday, August 13, 2013, 14:44 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X