ஐ20க்கு போட்டியாக வரும் மாருதியின் புதிய ஹேட்ச்பேக் கார்!

By Saravana

ஹூண்டாய் ஐ20 காருக்கு போட்டியாக புதிய பிரிமியம் ஹேட்ச்பேக் காரை மாருதி அறிமுகப்படுத்த உள்ளது. தோற்றம், தரம், வசதிகள் என அனைத்து விதத்திலும் சிறப்பாக இருக்கும் வகையில் இந்த கார் வடிவமைக்கப்பட்டு வருகிறது.

அடுத்த ஆண்டு புதிய ஐ20 கார் அறிமுகம் செய்யப்பட இருக்கும் நிலையில், இந்த காரை ஸ்விஃப்ட்டைவிட ஒரு படி மேலே இருக்கும் அம்சங்களுடன் மாருதி அறிமுகம் செய்ய உள்ளது.

குறியீட்டு பெயர்

குறியீட்டு பெயர்

ஒய்ஆர்ஏ என்ற குறியீட்டு பெயரில் இந்த புதிய ஹேட்ச்பேக் கார் வடிவமைக்கப்பட்டு வருகிறது.

(சுஸுகி எஸ்எக்ஸ்4 கார் மாதிரிக்காக பயன்படுத்தப்பட்டுள்ளன)

எஞ்சின்

எஞ்சின்

ஸ்விஃப்ட் போன்றே பெட்ரோல் மற்றும் டீசல் மாடலில் விற்பனைக்கு வரும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

அறிமுகம்

அறிமுகம்

2015ம் ஆண்டு இந்த புதிய கார் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 உற்பத்தி

உற்பத்தி

இது சர்வதேச கார் மாடல் என்பதால் மாருதியின் இந்திய ஆலையிலும், ஹங்கேரியிலுள்ள சுஸுகி ஆலையிலும் உற்பத்தி செய்யப்பட முடிவு செய்யப்பட்டுள்ளதாம்.

 போட்டியாளர்கள்

போட்டியாளர்கள்

இன்றைய நிலையில், ரூ9 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை கொடுத்து சிறந்த ஹேட்ச்பேக் கார்களை வாங்குவதற்கு இந்திய வாடிக்கையாளர்கள் தயாராக இருக்கின்றனர் என்பதை மாருதி புரிந்து கொண்டுள்ளது. போலோ ஜிடி, புன்ட்டோ 90 மற்றும் ஹூண்டாய் ஐ20 கார்கள் மார்க்கெட்டில் நிலைநிறுத்தப்பட்டுள்ளதை மனதில் கொண்டு தனது புதிய காரையும் ஏற்றுக்கொள்வார்கள் என்று மாருதி நம்புகிறது. எனவே, தரத்திலும், வசதிகளிலும் எந்த குறையும் இல்லாத வகையில், மிக சிறப்பான ஹேட்ச்பேக் மாடலாக மாருதி களமிறக்க திட்டமிட்டுள்ளது.

Most Read Articles
English summary
According to the reports, Maruti Suzuki developing a brand new hatchback code-named the YRA.
Story first published: Thursday, October 24, 2013, 11:00 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X