இன்னோவாவை வீழ்த்த புறப்பட்ட மாருதி: புதிய எம்பிவியை தயாரிக்கிறது

By Saravana

டொயோட்டா இன்னோவாவை நேருக்கு நேர் சந்திக்கும் விதமாக புதிய எம்பிவி காரை வடிவமைக்கும் பணிகளை மாருதி துவக்கியுள்ளது. விலை, இடவசதி, வசதிகள் என அனைத்திலும் இன்னோவாவுக்கு இணையாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

ஆர்எக்ஸ் என்ற சங்கேத பெயரில் மாருதி ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தில் அழைக்கப்படும் இந்த புதிய எம்பிவி கார் எர்டிகாவுக்கு மேலான ரகத்தில் வர இருக்கிறது. கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

ரகசியம் கசிந்தது

ரகசியம் கசிந்தது

புதிய எம்பிவி தொடர்பாக மாருதி தயார் செய்து வைத்திருந்த ஆவணங்கள் குறித்த தகவல்கள் பிரபல வர்த்தக இதழ் ஒன்றின் மூலம் கசிந்துள்ளன.

டிசைன்

டிசைன்

முழுமையான எம்பிவி அல்லது கிராஸ்ஓவர் டிசைனில் இந்த புதிய கார் டிசைன் செய்யப்படும் வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருக்கை அமைப்பு

இருக்கை அமைப்பு

2+3+3 என்ற இருக்கை அமைப்பு கொண்டதாக, 8 பேர் பயணிக்கும் வசதி கொண்டதாக புதிய எம்பிவி கார் வருகிறது.

டீசல் எஞ்சின்

டீசல் எஞ்சின்

இந்த புத்தம் புது எம்பிவி காரில் அதிக சக்திகொண்ட புதிய டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். இந்த எஞ்சின் தற்போது மாருதியின் தாய் நிறுவனமான சுஸுகியின் தலைமையகத்தில் வடிவமைக்கப்பட்டு வருகிறது. 2010ல் துவங்கப்பட்ட இந்த எஞ்சின் தயாரிப்பு அடுத்த ஆண்டு இறுதியில் நிறைவுபெறும் என்று தகவல்கள் கூறுகின்றன.

உறுதி

உறுதி

புதிய எம்பிவி கார் திட்டத்துக்கு மாருதியின் பொறியியல் பிரிவு தலைவர் சி.வி.ராமன் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான ஆவணங்களில் மாருதியின் மனிதவள மேம்பாட்டுத் துறை தலைமை அதிகாரி சித்திக் கையொப்பமிட்டுள்ளார். கடந்த ஏப்ரல் 30ந் தேதி இந்த ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு நிறைவு பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதுகுறித்து மாருதி கருத்து தெரிவிக்க மறுத்துள்ளது.

சப்ளையர்களும் உறுதி

சப்ளையர்களும் உறுதி

மாருதிக்கு உதிரிபாகங்கள் சப்ளை செய்யும் 3 நிறுவனங்கள் புதிய கார் திட்டத்தை உறுதி செய்துள்ளன. மேலும், அது எம்பிவி மாடலாகத்தான் இருக்க வேண்டும் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.

அறிமுகம் எப்போது?

அறிமுகம் எப்போது?

இந்த புதிய எம்பிவி காரை வடிவமைப்பதற்கான ஆயத்தப் பணிகள் தற்போது நடந்து வருகின்றன. 2017ம் ஆண்டு இந்த புதிய காரை அறிமுகம் செய்வதற்கு மாருதி திட்டமிட்டுள்ளது.

விலை

விலை

இன்னோவாவைவிட குறைவான விலையில் புதிய எம்பிவி காரை அறிமுகம் செய்ய மாருதி திட்டமிட்டுள்ளதாம். இதனால், இப்போதே இந்த எம்பிவி குறித்த எதிர்பார்ப்பும், பரபரப்பும் அதிகரித்துள்ளது.

(குறிப்பு: மாதிரிக்காக எர்டிகா எம்பிவி காரின் படங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன)

Most Read Articles
Story first published: Thursday, November 28, 2013, 10:54 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X