விற்பனை சரிவு... ஸ்விப்ட், டிசையர் கார் உற்பத்தி நிறுத்தம்!

விற்பனை குறைந்ததால் ஸ்விப்ட், டிசையர் கார் உற்பத்தியை மாருதி தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. கார் மார்க்கெட் தொடர்ந்து மந்தமாக இருந்து வருகிறது. அடுத்தடுத்த புதிய மாடல்களின் வரவும் மாருதிக்கு நெருக்கடியை தந்துள்ளது.

இதன் எதிரொலியாக கடந்த மாத மத்தியிலிருந்து தனது உற்பத்தியில் அவ்வப்போது மாற்றங்களை செய்து வருகிறது மாருதி. இந்த நிலையில், ஹோண்டா அமேஸ் மற்றும் சமீபத்தில் விற்பனைக்கு வந்த ஈக்கோஸ்போர்ட் ஆகியவற்றால் ஸ்விப்ட் மற்றும் டிசையர் கார்களுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக கருதப்படுகிறது.

ஸ்விப்ட் உற்பத்தி நிறுத்தம்

ஸ்விப்ட் உற்பத்தி நிறுத்தம்

கடந்த இரு மாதங்களின் விற்பனை நிலவரப்படி, ஸ்விப்ட், டிசையர் கார்களின் விற்பனை வேகமாக சரிந்துவிட்டது. இதையடுத்து, குர்கான் ஆலையில் ஸ்விப்ட், டிசையர் கார்களின் உற்பத்தியை முற்றிலுமாக மாருதி நிறுத்தி வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மீண்டும் உற்பத்தி

மீண்டும் உற்பத்தி

இருப்பு தீர்ந்தவுடன் உற்பத்தியை துவங்குவதற்கு மாருதி முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

திடீர் சரிவு

திடீர் சரிவு

20,000 நெருக்கத்தை தொட்டுக் கொண்டிருந்த ஸ்விப்ட், டிசையர் கார்களின் விற்பனை கடந்த சில மாதங்களாக கிடுகிடுவென சரிந்து வருகிறது. கடந்த மாதம் 12,548 டிசையர் கார்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளன.

டீசல் எஞ்சினும் நிறுத்தம்

டீசல் எஞ்சினும் நிறுத்தம்

மானேசர் ஆலையில் டீசல் எஞ்சின் உற்பத்தியை வெகுவாக குறைத்துள்ளது. மூன்றாவது ஷிப்ட்டில் உற்பத்தியை நிறுத்தியிருக்கும் மாருதி, அங்கு பணிபுரிந்து வரும் 200 தொழிலாளர்களை காலவரையற்ற விடுப்பில் செல்லுமாறு அனுப்பிவிட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

அப்போ டீசல் வேகன் ஆர்

அப்போ டீசல் வேகன் ஆர்

இதே நிலை நீடித்தால், புதிதாக அறிமுகம் செய்யப்பட இருக்கும் டீசல் வேகன்-ஆர் உள்ளிட்ட கார்களின் அறிமுகத்தை மாருதி ஒத்திவைக்க நேரிடும் நிலை ஏற்பட்டுள்ளது.

Most Read Articles
English summary
Country's largest car maker Maruti suzuki has stopped the production of both swift and dzire cars at their plant in Gurgaon.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X