மினி டிரக் சந்தையில் இறங்குவதை உறுதிப்படுத்திய மாருதி

Maruti Mini Truck
மினி டிரக் தயாரிப்பில் இறங்குவதை மாருதி உறுதிப்படுத்தியிருக்கிறது. இதுதவிர, குவாட்ரிசைக்கிள் ரக பயணிகள் வாகனத்தை இறக்கும் திட்டத்தையும் கையில் வைத்துள்ளது.

நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பாளரான மாருதி தனது வர்த்தகத்தை விரிவாக்குவதோடு, புதிய வாகன மார்க்கெட்டிலும் அடியெடுத்து வைக்க முடிவு செய்துள்ளது.

ஓம்னி மினி வேனை அடிப்படையாக் கொண்டு புதிய மினி டிரக்கை அறிமுகப்படுத்த உள்ளது. இந்த புதிய மினி டிரக் டீசல் மற்றும் சிஎன்ஜி மாடல்களில் விற்பனைக்கு வருகிறது.

புதிய மினி டிரக்கை உருவாக்குவதற்கு எங்களது எஞ்சினியர்களுக்கு 2 ஆண்டு காலம் பிடிக்கும் என மாருதி தெரிவித்துள்ளது. இதுதவிர, குவாட்ரிசைக்கிள் எனப்படும் மிகச்சிறிய பயணிகள் வாகனங்களையும் தயாரிக்கும் திட்டமும் மாருதி வசம் உள்ளது.

இந்த வகை வாகனங்களுக்கு சமீபத்தில்தான் மத்திய அரசு அனுமதி கொடுத்தது. பஜாஜ் ஆட்டோவின் ஆர்இ60 விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் நிலையில், பியாஜியோ, மஹிந்திரா உள்ளிட்ட நிறுவனங்களோடு மாருதியும் இந்த மார்க்கெட்டில் குதிக்க திட்டமிட்டுள்ளது.

Most Read Articles
English summary
While Maruti Suzuki is a market leader in the compact passenger vehicle segment in India, it does not have a presence in the commercial vehicle segment, a void it wants to fill in soon. The automaker has confirmed that it will enter the Light Commercial Vehicle segment with the introduction of a brand new model.
Story first published: Monday, July 29, 2013, 10:11 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X