இந்தியாவில் புதிய 1.2 லிட்டர் டீசல் எஞ்சினுடன் ஸ்விப்ட் சோதனை

By Saravana

இந்திய வாடிக்கையாளர் மத்தியில் அனைத்து விதத்திலும் நிறைவான காராக புகழப்பட்டு வருவது மாருதி ஸ்விஃப்ட். மாதத்திற்கு சராசரியாக 15,000 கார்கள் விற்பனையாகி மாருதிக்கும் தெம்பு கொடுத்து வருகிறது.

இந்த நிலையில், ஐரோப்பிய மார்க்கெட்டுகளில் தரிசனம் தந்த மேம்படுத்தப்பட்ட ஸ்விஃப்ட் காரை இந்தியாவிலும் விரைவில் விற்பனைக்கு கொண்டு வருவதற்கு மாருதி திட்டமிட்டுள்ளது. இந்த கார் தற்போது இந்தியாவில் புதிய டீசல் எஞ்சினுடன் சோதனை நடத்தப்பட்டு வருவதாக டீம் பிஎச்பி தளத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

சோதனை ஓட்டம்

சோதனை ஓட்டம்

சர்வதேச மாடலில் காணப்பட்ட குரூஸ் கன்ட்ரோல், புஷ் பட்டன் ஸ்டார்ட்டுடன் கூடிய கீ லெஸ் என்ட்ரி ஆகிய வசதிகள் இந்திய மண்ணில் சோதனை செய்யப்பட்டு வரும் காரிலும் இருப்பதாக படம் பிடித்தவர் தெரிவித்துள்ளார்.

 இதர அம்சங்கள்

இதர அம்சங்கள்

சர்வதேச மாடலில் எல்இடி பகல் நேர ரன்னிங் விளக்குகளும், ஸ்டார்ட் ஸ்டாப் சிஸ்டமும் இந்த காரிலும் இடம்பெறும் என்று நம்பப்படுகிறது.

புதிய டீசல் எஞ்சின்

புதிய டீசல் எஞ்சின்

மேம்படுத்தப்பட்ட ஸ்விஃப்ட் காரில் சுஸுகியின் புதிய 1.2 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு வர இருப்பதாகவும் கூறப்படுகிறது.

டர்போ லேக் இருக்காது

டர்போ லேக் இருக்காது

தற்போதைய மாடலில் பயன்படுத்தப்பட்டும் வரும் ஃபியட்டின் 1.3 லிட்டர் மல்டிஜெட் டீசல் எஞ்சின் அதிக டர்போ லேக் இருப்பதாக குற்றச்சாட்டு இருக்கிறது. இதனை களையும் விதமாக டர்போ லேக் பிரச்னை இல்லாத அதிக பெர்ஃபார்மென்ஸ் வழங்கும் புதிய 1.2 லிட்டர் டர்போசார்ஜர் டீசல் எஞ்சினை சோதனை ஓட்டக் காரில் பொருத்தியிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 புதிய தலைமுறை எஞ்சின்

புதிய தலைமுறை எஞ்சின்

புதிய தலைமுறை டீசல் எஞ்சின்களை சுஸுகி தயாரித்து வருகிறது. அடுத்த ஓரிரு ஆண்டுகளில் அறிமுகப்படுத்த இருக்கும் இந்த புதிய டீசல் எஞ்சின்கள் 1.2 லி, 1.4லி மற்றும் 1.6லி திறன் கொண்டதாக வர இருக்கின்றன. இதில், 1.2 லிட்டர் டீசல் எஞ்சினை முதலாவதாக ஸ்விஃப்ட் காரில் பொருத்தி வெளியிட சுஸிகி முடிவு செய்துள்ளதாம்.

பரபரப்பு

பரபரப்பு

பெரிதும் விரும்பப்படும் கார் மாடலான ஸ்விஃப்ட்டில் டீசல் மாடலின் விற்பனையை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. இந்த நிலையில், புதிய டீசல் எஞ்சினுடன் ஸ்விஃப்ட் வர இருப்பதாக வெளியாகியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Most Read Articles
Story first published: Thursday, October 10, 2013, 15:33 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X