பாதுகாப்பு தர சோதனையில் ஸ்விஃப்ட்டுக்கு 4 நட்சத்திர அந்தஸ்து

பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த கார் வேரியண்ட்டுகளுக்கு இப்போது இந்திய வாடிக்கையாளர்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்கத் துவங்கியுள்ளனர். ஆனால், இந்தியாவில் கிராஷ் டெஸ்ட் எனப்படும் கார்களை பாதுகாப்பு சோதனைகளுக்கு உட்படுத்தி கார்களின் பாதுகாப்பு அம்சங்களை புட்டு வைக்கும் வகையிலான சோதனைகள் இப்போது இல்லை. ஆனால், அராய் இதற்கான சோதனை மையத்தை நிறுவியுள்ளது. ஆனால், அதில் இதுவரை சோதனைகள் துவங்கப்படவில்லை.

ஐரோப்பிய என்சிஏபி போன்றே ஆசியாவிற்கான பாதுகாப்பு தர சோதனைகளில் மிக முக்கியமானதாக கருதப்படும் ஏசியன் என்சிஏபி அமைப்பு கார்களை கிராஷ் டெஸ்ட் சோதனைகளை நடத்துகிறது. இதன் ஒரு அங்கமாக மலேசிய சாலை பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனம் சமீபத்தில் 11 கார்களை கிராஷ் டெஸ்ட் செய்து முடிவுகளை வெளியிட்டுள்ளது.

அதில், இந்தியாவில் விற்பனையாகும் மாருதி ஸ்விஃப்ட், நிசான் சன்னி மற்றும் மிட்சுபிஷி பஜேரோ ஸ்போர்ட் ஆகிய கார்களும் இடம்பெற்றுள்ளன. கிராஷ் டெஸ்ட் வீடியோ, கூடுதல் விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

சோதனை விபரம்

சோதனை விபரம்

மோதலின்போது முன்புறத்திலும், காருக்குள் இருக்கும் பயணிகளுக்கு ஏற்படும் பாதிப்புகளை கண்டறியும் விதத்தில் இந்த சோதனை நடத்தப்பட்டது. இதற்காக, காருக்குள் டிரைவர், சக பயணி மற்றும் 2 குழந்தைகளின் பொம்மைகள் வைத்து சோதனை செய்யப்பட்டது. மணிக்கு 64 கிமீ வேகத்தில் காரை மோதச் செய்து இந்த சோதனை நடத்தப்பட்டது.

ஸ்விஃப்ட்டுக்கு 4 ஸ்டார்

இரண்டு காற்றுப் பைகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி புரொகிராம்(ESP) சீட் பெல்ட் எச்சரிக்கை வசதிகள் கொண்ட ஸ்விஃப்ட் கார் பாதுகாப்புக்கு உட்படுத்தப்பட்டது. பயணிகள் பாதுகாப்பு சோதனையில் ஸ்விஃப்ட்டுக்கு 77 புள்ளிகள் கிடைத்ததுடன், 4 நட்சத்திர அந்தஸ்தை பெற்றுள்ளது.

குழந்தைகளுக்கான பாதுகாப்பு

குழந்தைகளுக்கான பாதுகாப்பு

ஸ்விஃப்ட் காரில் பெரியவர்களுக்கு காயம் ஏற்படும் அளவு குறைவாக இருப்பதாகவும், குழந்தைகளுக்கான பாதுகாப்பு அம்சத்தில் 77 சதவீத புள்ளிகளையும் பெற்று வெரிகுட் வாங்கியுள்ளது.

நிசான் சன்னி

இஎஸ்பி தொழில்நுட்பம் இல்லையென்றாலும் 2 ஏர்பேக்குகள் கொண்ட, நிசான் சன்னி 4 நட்சத்திர அந்தஸ்தை பெற்றுள்ளது நிசான் சன்னி.

சன்னி பாதுகாப்பு

சன்னி பாதுகாப்பு

விபத்தின்போது பெரியவர்களுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தாவிட்டாலும், குழந்தைகளுக்கான பாதுகாப்பு அம்சத்தில் 52 சதவீத புள்ளிகளை மட்டுமே பெற்று ஸ்விஃப்ட்டை விட பின்தங்கிவிட்டது சன்னி.

மிட்சுபிஷி பஜேரோ ஸ்போர்ட்

பயணிகளுக்கான பாதுகாப்பு அம்சத்தில் 40 புள்ளிகளை மட்டுமே மிட்சுபிஷி பஜேரோ ஸ்போர்ட் பெற்றாலும், ஒட்டுமொத்த பாதுகாப்பில் 4 நட்சத்திர அந்தஸ்தை பெற்றுள்ளது.

 5 ஸ்டார் கார்கள்

5 ஸ்டார் கார்கள்

டொயோட்டா பிரையஸ், ஹோண்டா சிவிக், சுபரு எக்ஸ்வி ஆகிய கார்களுக்கு 5 நட்சத்திர அந்தஸ்தை பெற்றுள்ளன.

Most Read Articles
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X