நூற்றாண்டை தொட்ட மஸராட்டி... சிறப்பு தகவல்கள்!

ஸ்போர்ட்ஸ் கார் தயாரிப்பில் உலக அளவில் புகழ்பெற்ற மஸராட்டி நிறுவனத்தின் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளது.

கடந்த 1ந் தேதியுடன் மஸராட்டி நிறுவனம் துவங்கப்பட்டு 99 ஆண்டுகள் நிறைவடைந்து நூறாவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இந்த நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாடுவதற்கு மஸராட்டி திட்டமிட்டுள்ளது.

இதற்கான ஏற்பாடுகளில் மஸராட்டி மூழ்கியுள்ளது. மேலும், நூற்றாண்டு கொண்டாட்டங்கள் குறித்த விரிவான விபரங்களையும் விரைவில் வெளியிட அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இன்று சிறந்த ஸ்போர்ட்ஸ் கார் நிறுவனங்களில் ஒன்றாக புகழ்பெற்று திகழும் மஸராட்டி குறித்த சில முக்கிய செய்திகளை ஸ்லைடரில் காணலாம்.

நூற்றாண்டு சின்னம்

நூற்றாண்டு சின்னம்

நூற்றாண்டு விழாவையொட்டி சிறப்பு சின்னத்தை வடிவமைத்து மஸராட்டி வெளியிட்டுள்ளது.

 தலைமையிடம்

தலைமையிடம்

1914ம் ஆண்டு டிசம்பர் 1ந் தேதி இத்தாலியிலுள்ள போலோக்னா என்ற இடத்தில் ஆல்ஃபிரி, பிண்டோ ஆகிய இரண்டு சகோதரர்கள் இணைந்து மஸராட்டியை ஸ்தாபிதம் செய்தனர். 1932ல் ஆல்ஃபிரி மரணமடைந்ததையடுத்து, கார்லோ, எட்டோர் மற்றும் எர்னெஸ்டோ ஆகிய மேலும் 3 சகோதரர்கள் கார் தயாரிப்பில் இணைந்து கொண்டனர்.

 மஸராட்டி பிராண்டு

மஸராட்டி பிராண்டு

முதலில் டையோட்டா என்ற நிறுவனத்துக்கு 2.0 லிட்டர் எஞ்சின் கொண்ட கிராண்ட் ஃப்ரீ கார்களை தயாரித்து கொடுத்தனர். டையாட்டோ நிறுவனம் கார் தயாரிப்பிலிருந்து விலகியதையடுத்து. சொந்தமாக மஸராட்டி பிராண்டில் புதிய காரை வெளியிட்டனர். 1926ல் டிப்போ 26 என்ற ரேஸ் காரை தயாரித்து அதனை ஆல்ஃபிரி பந்தயத்தில் செலுத்தினார். இதுதான் மஸராட்டின் முதல் கார். இதைத்தொடர்ந்து, பல்வேறு கார் பந்தயங்களில் மஸராட்டி சகோதரர்களின் கார் வெற்றிகளை பெற்றது. இதன்மூலம், இவர்களும் பிரபலமாகினர்.

 மஸராட்டி லோகோ

மஸராட்டி லோகோ

மஸராட்டியின் திரிசூல வடிவிலான சின்னத்தை மஸராட்டி சகோதரர்களில் ஒருவரான மரியோ என்பவர்தான் உருவாக்கியதாக நம்பப்படுகிறது. இவர் ஓவியர் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் பயணிகள் கார்

முதல் பயணிகள் கார்

கார் தயாரிப்பில் நீண்ட அனுபவத்தை கொண்டிருந்தாலும் தொடர்ந்து பந்தய கார்களை வடிவமைத்து வந்தனர் மஸராட்டி சகோதரர்கள். பின்னர், 1963ல் முதல் ஏ6 கிராண்ட் டூரர் என்ற முதல் பயணிகள் காரை அறிமுகம் செய்தனர்.

 ஃபியட் வசம்

ஃபியட் வசம்

நூற்றாண்டு விழா கொண்டாடும் மஸராட்டி கார் தயாரிப்பு நிறுவனம் தற்போது இத்தாலியிலுள்ள மோடெனாவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. 1993ம் ஆண்டு முதல் இந்த நிறுவனம் ஃபியட் வசம் உள்ளது.

மஸராட்டி மாடல்கள்

மஸராட்டி மாடல்கள்

மஸராட்டி நிறுவனம் தற்போது கிராண்ட் டூரிஷ்மோ, குவாட்ரோபோர்ட்டே மற்றும் கிராண்ட்கேப்ரியோ ஆகிய 3 உயர் ரக கார் மாடல்களை விற்பனை செய்து வருகிறது.

விழா

விழா

நூற்றாண்டு விழாவின் ஒரு பகுதியாக அடுத்த ஆண்டு செப்டம்பர் 19ந் முதல் 21ந் தேதி வரை உலக முழுவதும் இருந்து 250 மஸராட்டி கார்கள் ஒன்றுகூடும் நிகழ்வுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுபோன்று பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்த மஸராட்டி திட்டமிட்டுள்ளது.

Most Read Articles
English summary
December accounts for the Centenary year of Maserati. The Italian Manufacturer is one of the fastest growing Super-Car brands in America and 70 other markets around the world. China being its second largest market. Maserati believe they are 100 years young and not old.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X