7 நிமிடங்களில் நர்பர்க்ரிங் ரேஸ் டிராக்கை கடந்த மெக்லாரன் பி1!!

By Saravana

ஜெர்மனியிலுள்ள நர்பர்க்ரிங் பந்தய ஓடுதளம் உலகிலேயே மிக சவாலானதாக கருதப்படுகிறது. 154 அபாயகரமான வளைவுகள் கொண்ட இந்த பந்தய ஓடுதளத்தில் விபத்து என்பது சர்வசாதாரண விஷயம். இந்த டிராக்கை குறுகிய நேரத்தில் கடந்து சாதிப்பதை ஒவ்வொரு பந்தய வீரரும் பெருமையாக கருதி காரை செலுத்துவதே அதற்கு காரணம்.

இந்த நிலையில், நர்பர்க்ரிங் ஓடுதளத்தை அதிவேகத்தில் மெக்லாரன் பி1 கார் சமீபத்தில் கடந்துள்ளது. நர்பர்க்ரிங் ஓடுதளத்தின் 20.8 கிமீ தூரம் கொண்ட ஒரு குறிப்பிட்ட பாதையை 7 நிமிடங்களில் கடந்துள்ளது இந்த புதிய ஹைப்பர் கார்.

மணிக்கு சராசரியாக 178 கிமீ வேகத்தில் காரை ஓட்டினால் மட்டுமே இந்த தூரத்தை 7 நிமிடங்களுக்குள் கடக்க முடியும். ஆனால், எவ்வளவு நேரத்தில் மெக்லாரன் பி1 கார் கடந்தது என்ற துல்லியமான விபரத்தை மெக்லாரன் வெளியிடவில்லை. எனவே, தற்போது இதே டிராக்கை அதிவேகத்தில் கடந்த கார் என்ற சாதனையை தொடர்ந்து போர்ஷே 918 ஸ்பைடர் தக்க வைத்துள்ளது.

வீடியோ

நர்பர்க்ரிங் ஓடுதளத்தில் மெக்லாரன் பி1 கார் அசுரத்தனமாக கடந்து செல்வதை வீடியோவில் கண்டு ரசிக்கலாம். மெக்லாரன் பி1 கார் குறித்த கூடுதல் தகவல்களை அடுத்தடுத்த ஸ்லைடுகளில் வழங்கியுள்ளோம்.

 வச்ச குறி தப்பாது

வச்ச குறி தப்பாது

மெக்லாரன் நிறுவனம் பி1 காரை பல்வேறு சோதனைகளுக்கு உட்படுத்தி வருகிறது. அதில், 17 வினாடிகளில் 0- 300 கிமீ வேகத்தை தொட்டுவிடுவதற்கு இலக்கு வைக்கப்பட்டது. இந்த இலக்கை பி1 கார் அசால்ட்டாக கடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கார் 3 வினாடிகளில் 0-100 கிமீ வேகத்தையும், 7 வினாடிகளில் 0- 200 வேகத்தையும் எட்டிவிடும். மணிக்கு 350 கிமீ வேகம் வரை செல்லும் வல்லமை கொண்டது.

ஹைபிரிட் நுட்பம்

ஹைபிரிட் நுட்பம்

இந்த கார் ஹைபிரிட் நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. 3.8 லிட்டர் ட்வின் டர்போ வி8 எஞ்சின் மற்றும் எலக்ட்ரிக் மோட்டார் இணைந்து 915 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் திறன் கொண்டது.

விசேஷ டயர்கள்

விசேஷ டயர்கள்

இந்த காரில் விசேஷ டயர்கள் பொருத்தப்பட்டிருப்பதால் ரேஸ் டிராக் மற்றும் சாதாரண சாலைகள் என இரண்டிலும் செல்லும் தகுதி பெற்றது.

லிமிடேட் மாடல்

லிமிடேட் மாடல்

375 மெக்லாரன் பி1 கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ளன. ஒவ்வொரு காரும் இங்கிலாந்திலுள்ள உற்பத்தி மையத்தில் எந்திரங்கள் உதவியின்றி கைகளாலேயே ஒருங்கிணைக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு கார் தயாரிப்புக்கு...

ஒரு கார் தயாரிப்புக்கு...

ஒவ்வொரு மெக்லாரன் பி1 காரையும் ஒருங்கிணைப்பு மையத்தை சேர்ந்த 82 நிபுணர்களின் கைகளால் 17 நாட்கள் எடுத்துக் கொண்டு உருவாக்கப்படுகின்றன. மொத்தம் 4 கட்டமாக அசெம்பிள் செய்யப்படுகிறது.

 பிரேக்கிங் திறன்

பிரேக்கிங் திறன்

பிரேக் பிடிக்கும்போது 100 வேகத்திலிருந்து காரை நிறுத்துவதற்கு வெறும் 2.9 வினாடிகளில் காரை நிறுத்திவிடும். அதாவது, 30.2 மீட்டருக்குள் கார் நின்றுவிடும்.

விலை

விலை

மெக்லாரன் பி1 காருக்கு 1.5 மில்லியன் டாலர் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Most Read Articles
English summary
McLaren has released the official video of the P1 hybrid hypercar lapping the Nürburgring-Nordschleife and all we can say is it's an absolutely beautiful short film that perfectly summarizes the challenge of completing a lap of The Green Hell.
Story first published: Monday, December 9, 2013, 16:41 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X