மிக குறைவான விலையில் மெக்லாரன் இறக்கும் புதிய ஸ்போர்ட்ஸ் கார்!

By Saravana

குறைவான விலையில் மெக்லாரன் விற்பனைக்கு கொண்டு வர இருக்கும் புதிய ஸ்போர்ட்ஸ் காரின் அதிகாரப்பூர்வமான முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

மெக்லாரன் பி13 என்ற பெயரில் வரும் இந்த என்ட்ரி லெவல் ஸ்போர்ட்ஸ் கார் போர்ஷே 911, ஜாகுவார் எஃப் டைப் மற்றும் பென்ஸ் எஸ்எல்எஶ் ஏஎம்ஜி கார்களுக்கு போட்டியாக இருக்கும்.

டிசைன்

டிசைன்

மெக்லாரனின் பி1 ஹைப்பர் காரின் டிசைன் தாத்பரியங்கள் அதிக அளவில் எடுத்து இந்த காரை உருவாக்கியிருக்கின்றனர்.

மெக்லாரன் பி13 காரின் டீசர் படம். அடுத்தடுத்த ஸ்லைடுகளில் மெக்லாரன் பி13 காரின் படங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது.

எஞ்சின்

எஞ்சின்

இந்த காரில் மெக்லாரன் எம்பி4 12சி காரில் பொருத்தப்பட்டிருக்கும் 616 பிஎச்பி ஆற்றல் கொண்ட 3.8 லிட்டர் ட்வின் டர்போ எஞ்சின் 444 பிஎச்பி பவரை வெளிப்படுத்துவதாக மாற்றங்கள் செய்யப்பட்டு பொருத்தப்பட்டிருக்கும்.

மோனோசெல் சேஸீ

மோனோசெல் சேஸீ

மெக்லாரன் 12சி மற்றும் பி1 கார்களை போன்றே இந்த பி13 காரும் கார்பன் ஃபைபர் மோனோசெல் சேஸீ கொண்டிருக்கும். இலகு எடை கொண்ட இந்த சேஸீயின் தயாரிப்பு செலவீனம் 12சி காரைவிட குறைவாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாஸ் புரொடெக்ஷன் கார்

மாஸ் புரொடெக்ஷன் கார்

மற்ற மெக்லாரன் கார்களை போன்று அல்லாமல் இந்த கார் அதிக எண்ணிக்கையில் உற்பத்தி செய்வதற்கான மாஸ் புரொடெக்ஷன் காராக நிலைநிறுத்தப்பட உள்ளது. 2015ம் ஆண்டில் 2,500 கார்களை விற்பனை செய்ய மெக்லாரன் திட்டமிட்டுள்ளது. இதன்படி, விலை குறைவாக இருக்கும் என்பது கணிப்பு.

விலை

விலை

தற்போது விற்பனையில் இருக்கும் மெக்லாரனின் 12 சி காரைவிட 40 சதவீதம் வரை விலை குறைவான கார் மாடலாக இருக்கும். ஒரு கோடி ரூபாயையொட்டிய விலையில் இந்த புதிய ஸ்போர்ட்ஸ் கார் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விலை குறைவான காராக இருந்தாலும், 12சி மற்றும் பி1 கார் போன்று இதுவும் அதிசக்திவாய்ந்த ஸ்போர்ட்ஸ் கார் மாடலாக இருக்கும் என மெக்லாரன் தெரிவித்துள்ளது.

கூபே மாடல்

கூபே மாடல்

முதலில் கூபே மாடலில் அறிமுகம் செய்யப்படும். பின்னர், கன்வெர்ட்டிபிள் மாடலை அறிமுகம் செய்ய மெக்லாரன் முடிவு செய்துள்ளது. அடுத்த ஆண்டு பாரிஸ் மோட்டார் ஷோவில் இந்த புதிய மெக்லாரன் கார் அறிமுகம் செய்யப்பட உள்ளது. 2015ம் ஆண்டு விற்பனைக்கு வரும்.

Most Read Articles
English summary
The first official details of the McLaren P13 have been released. For those listening to that name for the first time, the P13 is a 2015 model that will be McLaren's entry level sports car, placed below MP4-12C. The McLaren P13 will rival sports cars such as the Porsche 911, sporty versions of Jaguar F-Type and the Merc SLS AMG replacement.
Story first published: Thursday, December 12, 2013, 13:37 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X