Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English हिन्दी ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

மெர்சிடிஸ் பென்ஸ் இ350 கூபே - டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்

Posted by:
Updated: Monday, March 4, 2013, 11:51 [IST]

சொகுசு மார்க்கெட்டில் ஏராளமான மாடல்கள் குவிந்து வந்தாலும், அந்த ஆடம்பரத்தை வெளிக்கொணவர்தில் சில மாடல்கள் மட்டும் தனக்கென தனித்துவத்தை பெற்றிருக்கும். இந்த வார்த்தைகளுக்கு ஏற்ற ஒரு சொகுசு கார் மாடல்தான் பென்ஸ் நிறுவனத்தின் இ350 கூபே. திரும்பி பார்க்க வைக்கும் வடிவமைப்பு, பவர்ஃபுல் எஞ்சின் என தன்னை ஒரு பக்காவான சொகுசு காராக பரைசாற்றும் இ-350 கூபே காரை டெஸ்ட் டிரைவ் செய்யும் வாய்ப்பை பென்ஸ் நிறுவனம் வழங்கியிருந்தது.

இந்தியாவில் சிஎல்கே காருக்கு மாற்றாக வந்த இந்த காரை 3 நாட்கள் கையில் வைத்து சாதக, பாதகங்களை மிக நெருக்கமாக ஆராய்ந்து இந்த டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்டை வழங்குகிறோம். 2 கதவுகள் கொண்ட இந்த கூபே கார் இளைய சமுதாயத்தை கவரும் அம்சங்களை தன் வசம் வைத்து வசியப்படுத்துகிறது. கொடுக்கும் பணத்திற்கு ஏற்ப ஏராளமான சிறப்பம்சங்களையும், சில குறைகளையும் கொண்டிருக்கிறது. அது என்னென்ன என்பதை ஸ்லைடரில் ஒவ்வொன்றாக காணலாம்.

டிசைன்

 இ 350 காரின் முக்கிய அம்சமே அதன் டிசைன்தான். இ-கிளாஸ் செடானிலிருந்து பல அம்சங்களையும், சி-கிளாஸ் காரின் சில டிசைன் தாத்பரியங்களையும் ஒன்றிணைத்து இந்த காரை டிசைன் செய்திருக்கிறது மெர்சிடிஸ் பென்ஸ். இதன் 2 டோர் டிசைன் மிக மிக கவர்ச்சியே.

எஞ்சின்

இந்த காரில் 3.5 லிட்டர் வி6 பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சம் 272 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் திறன் கொண்டது. 0-100 கிமீ வேகத்தை 7.4 வினாடிகளில் கடக்கிறது.

முகப்பு

புரொஜெக்டர் ஹெட்லைட், எல்இடி விளக்குகள் என்பதோடு, பெரிய முகப்பு கிரில்லுக்கு நடுவில் பென்ஸ் லோகோ வசீகரிக்கிறது.

பி பில்லர் இல்லை

2 கதவுகள் கொண்ட இந்த காரின் பக்கவாட்டு கண்ணாடிகளுக்கு இடையில் பில்லர் மிஸ்ஸிங்.

கூபே டிசைன்

இந்த காரை திரும்பி பார்க்க வைப்பதே இதன் கூபே டிசைன்தான். பின்புறத்திலிருந்து மிக மிக மெதுவாக ஏறும் கூரை முன்புறத்தில் மெதுவாக இறங்கி பானட்டில் சரியாக முடிவடைகிறது. மேலும், பென்ஸ் கார்களுக்கே உரிய நீண்ட பானட்டும் இந்த கூபே காரின் அழகை கூட்டுகிறது. கண்ணாடிகளை சுற்றி அலுமினிய பீடிங் கொடுக்கப்பட்டு கூபே வடிவமைப்பை கூட்டிக் காட்டுகிறது.

பவர் விண்டோஸ்

அனைத்து கதவுகளிலும் கண்ணாடியை ஏற்றி இறக்குவதற்கான பட்டன்கள் தனித்தனியாக கொடுக்கப்பட்டுள்ளன.

இருக்கை சுவிட்சுகள்

முன்புற இருக்கையை முன்புறம், பின்புறம் அட்ஜெஸ்ட் செய்வதற்கான கன்ட்ரோல் பட்டன்கள் இரண்டு கதவுகளிலும் கொடுக்கப்பட்டுள்ளன.

மியூசிக் சிஸ்டம்

இந்த காரில் ஹார்மன் மியூசிக் சிஸ்டம் பொருத்தப்பட்டிருக்கிறது. சென்ட்ரல் கன்சோலுக்கு கீழே டூவல் ஸோன் ஏசி பொருத்தப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு பகுதிக்கும் ஏற்ப ஏசியில் வெப்பநிலையை கூட்டிக் குறைக்க முடியும்.

திரை

பொழுதுபோக்கு மற்றும் நேவிகேஷனுக்காக திரை கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், டச் ஸ்கிரீன் வசதி இல்லை. மேலும், கியர் லிவருக்கு பின்னால் கொடுக்கப்பட்டிருக்கும் திருகு மூலம் பாடல்களை தெரிவு செய்து கொள்ள முடியும்.

கப் ஹோல்டர்

டிரைவருக்கு இடது புறத்தில் கியல் லிவருக்கு பின்னாலும், பின் இருக்கையின் நடுவிலும் கப் ஹோல்டர்கள் இருக்கின்றன. மேலும், மொபைல்போன் வைப்பதற்கும் இடம் உண்டு. இதுதவிர, ஆர்ம் ரெஸ்ட்டுக்கு கீழேயும் திறந்து மூடும் வசதி கொண்ட ஸ்டோரேஜ் பாக்ஸ் இருக்கிறது.

ரியர் ஏசி வென்ட்

பின் இருக்கைக்கு தனியாக ஏசி வென்ட்டுகள் பொருத்தப்பட்டிருக்கின்றன. இதன் ஏசி மிக பவர்ஃபுல்லாக இருக்கிறது.

பின் இருக்கை

பின்புறம் 2 பக்கெட் இருக்கைகள் பொருத்தப்பட்டுள்ளன. ஆனால்,இந்த இருக்கைகள் சாதாரண உயரம் கொண்டவர்களுக்கு சிறப்பாக இருக்கும். இது கூபே கார் என்பதால் கூரை மிக தாழ்வாக இருப்பதால் 6 அடி உயரம் கொண்டவர்கள் அமர்ந்தால் போதிய ஹெட்ரூம் இல்லை. கூரை இடிக்கிறது. இதேபோன்று, முன்புற இருக்கையில் வளத்தியானவர்கள் அமரும்போது முன் இருக்கையை நகர்த்தினால் பின்னால் அமர்ந்திருப்பவர்களுக்கு இடைஞ்சலாக இருக்கும்.

பூட் ரூம்

பொருட்களை தாராளமாக எடுத்துச் செல்வதற்கு வசதியாக பூட் ரூமை கொண்டிருக்கிறது.

டில்ட் ஸ்டீயரிங்

ஸ்டீயரிங்கை நம் இஷ்டத்திற்கு அட்ஜெஸ்ட் செய்து கொள்ள முடியும். இதற்கா, லிவர் ஸ்டீயரிங்கின் இடதுபுறம் உள்ளது. இதுதவிர, குரூஸ் கன்ட்ரோல் சிஸ்டத்துக்கான லிவரும், டிம், டிப், இன்டிகேட்டர் கன்ட்ரோல் லிவர் என அனைத்தும் ஸ்டீயரிங்கின் இடதுபுறமே கொடுக்கப்பட்டுள்ளது.

சன் ரூஃப்

இதன் பரந்து விரிந்த பானரோமிக் சன்ரூஃப் பயணத்தின்போது புதிய அனுபவத்தை தருகிறது. இதற்கான, கன்ட்ரோல் டிரைவர் இருக்கைக்கு மேலே கூரையில் பொருத்தப்பட்டிருக்கிறது.

கியர் பாக்ஸ்

இந்த காரில் 7 ஸ்பீடு ஜிடிரானிக் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கிறது. போக்குவரத்து நெரிசலில் செல்லும்போது கம்போர்ட் மோடிலும், நெடுஞ்சாலையில் கொஞ்சம் வேகமெடுக்க நினைத்தால் ஸ்போர்ட் மோடிலும் மாற்றிக் கொள்ளலாம். இதுதவிர, மேனுவலாக கியரை மாற்றி செல்லவும் முடியும்.

கீ லெஸ் என்ட்ரி

இந்த காரின் ரிமோட் சாவியை போட்டும் காரை ஸ்டார்ட் செய்யலாம். இல்லையென்றால் ரிமோட் சாவியை பாக்கெட்டில் வைத்துக் கொண்டு புஷ் பட்டனுக்காக கொடுக்கப்பட்டிருக்கும் ஒரு பட்டனை போட்டு ஸ்டார்ட் செய்ய முடியும். இந்த படத்தையும், அடுத்த படத்தையும் பாருங்கள்.

ஹெட்லைட் சுவிட்சுகள்

ஹெட்லைட் சுவிட்ச் டேஷ்போர்டில் சாவி துளைக்கு அருகில் இருக்கிறது. அதற்கு கீழே பி என்ற ஆங்கில எழுத்தில் குறிக்கப்பட்டிருக்கும் லிவர் பார்க்கிங் ரிலிஸ் லிவர். இந்த காரில் ஹேண்ட் பிரேக் கைக்கு அருகில் இல்லை. கிளட்ச் இல்லை என்பதால் அதையொட்டி காலால் மிதித்துதான் ஹேண்ட் பிரேக் போட முடியும். இந்த பார்க்கிங் லிவரை ரீலிஸ் செய்து காரை எடுக்க முடியும்.

ஹார்மன் ஆடியோ சிஸ்டம்

இந்த காரில் ஹார்மன் ஆடியோ சிஸ்டத்தின் பவர்ஃபுல் ஸ்பீக்கர்கள் மற்றும் ஊஃபர்கள் பயணத்தின்போது சிறந்த பொழுதுபோக்கை தரும்.

பாதுகாப்பு அம்சங்கள்

இந்த காரில் ஏராளமான பாதுகாப்பு அம்சங்கள் இருக்கின்றன. ஒருவேளை விபத்து நிகழும்போது பயணிகள் அதிக காயமடைவதை தடுக்கும் வகையிலான முன் இருக்கை ஹெட்ரெஸ்ட், சீட் பெல்ட்டை இறுக்கும் தொழில்நுட்பம், இஎஸ்பியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் ஆகியவை உள்ளன. அதிசக்திவாய்ந்த எஞ்சின் கொண்ட இந்த காரில் 9 காற்றுப் பைகள் பொருத்தப்பட்டிருக்கின்றன.

கையாளுமை, ஓட்டுதல் தரம்

இந்த காரில் 200 கிமீ வேகம் வரை எட்ட முடிந்தது. கையாளுமை மற்றும் ஓட்டுதல் சிறப்பாக இருக்கிறது. காரின் உள்ளுக்குள் அதிவேகம் செல்கிறோம் என்ற உணர்வு இல்லை. அந்த அளவுக்கு இந்த காரின் கட்டுமானத்தை செய்துள்ளது. அதேவேளை, ஸ்டீயரிங் வீல் மிக இலகுவாக இருக்கிறது. மேலும்,இதன் கிரவுண்ட் கிளியரன்ஸ் மிக மிக குறைவு என்பதால் வேகத்தடைகள் மற்றும் சற்று மேடான பகுதிகளில் இந்த காரை மிக கவனமாக ஓட்ட வேண்டியிருக்கிறது. நம்மூர் சாலைகளுக்கு பொருந்தாத மாடலோ என்று எண்ணத் தோன்றுகிறது.

பாதகங்கள்

பின் இருக்கையில் அமர்வதற்கு ஏறி, இறங்குவதற்கு மிகுந்த சிரமப்பட வேண்டியிருக்கிறது. முன் இருக்கையில் இருக்கும் சிறிய லிவரை திறந்து விட்டால் முன் இருக்கை தானாகவே முன்னே நகர்ந்து விடுகிறது. இருப்பினும், சவுகரியமாக இல்லை பேடில் ஷிப்ட்டும் இல்லாதது பெரும் குறை.

ரியர் பார்க்கிங் கேமரா இல்லை

ரூ.70 லட்சத்தை நெருங்கும் இந்த காரில் பார்க்கிங் சென்சார்கள் இருக்கின்றன. அருகில் பாதசாரிகள் அல்லது வாகனங்கள் வந்தால் பீப் ஒலி எழுப்பி எச்சரிக்கிறது. ஆனால், இவ்வளவு விலை கொண்ட இந்த காரில் ரியர் பார்க்கிங் கேமரா இல்லாதது பெரும் குறையாகத்தான் தெரிகிறது.

கேரியர்

இந்த காரில் கேரியரை பொருத்திக் கொள்ளும் வகையில் கூரையில் வசதி கொடுக்கப்பட்டுள்ளது.

சிறப்பு வசதி

இந்த காரில் கதவை திறக்காமல் கண்ணாடியை மட்டும் திறக்கலாம். ஒருவேளை, பர்ஸ் உள்ளிட்ட பொருட்களை காருக்குள் மறந்து வைத்துவிட்டால் ரிமோட் மூலம் கண்ணாடியை இறக்கிவிட்டு எடுத்துவிடலாம்.

டிரைவ்ஸ்பார்க் தீர்ப்பு

சிறந்த பெர்ஃபார்மென்ஸ், இதன் திரும்பி பார்க்க வைக்கும் டிசைன் ஆகியவை இ350 கூபே காருக்கு மிக பெரிய பலம். அதேவேளை, ரூ.10 லட்சத்தில் கிடைக்கும் கார்களில் இருக்கும் வசதிகள் இந்த காரில் இல்லாதது வியப்பளிக்கிறது. மொத்தத்தில் குடும்பத்திற்கு ஏற்றதாக இருக்காது. பவர், டிசைனை மட்டுமே நம்பி நாடும் இளைய சமுதாயத்தை மட்டுமே கவரும்.

Story first published:  Monday, March 4, 2013, 11:23 [IST]
English summary
Drivespark test drove Mercedes Benz's iconic car Mercedes Benz E350 Coupe on the fast and exciting roads of Bangalore. Mercedes Benz E350 Coupe is a powerful machine that offers great performance. Check out test drive review of Mercedes Benz E350 Coupe through pictures.
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil