மிரட்டலான டிசைனில் புதிய பென்ஸ் எஸ்யூவி: ஸ்கெட்ச் வெளியீடு

பி கிளாஸ் காரை சற்று அடித்து தட்டி எஸ்யூவி மாடலாக மாற்றப்பட்டிருக்கும் புதிய ஜிஎல்ஏ காம்பெக்ட் எஸ்யூவியின் மஸ்கெட்ச்சுகளை ஃபேஸ்புக் பக்கத்தில் பென்ஸ் வெளியிட்டிருக்கிறது. சில மாதங்களுக்கு முன் ஷாங்காய் ஆட்டோ ஷோவில் கான்செப்ட் மாடலாக இந்த எஸ்யூவி பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது.

மிரட்டலான தோற்றம் கொண்டதாக இருக்கும் இந்த புதிய ஜிஎல்ஏ எஸ்யூவியின் உற்பத்தி நிலை மாடல் பிராங்க்ஃபர்ட் ஆட்டோ ஷோவில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பென்ஸ் வெளியிட்டுள்ள மாதிரி படங்கள் பெரும் ஆவலைத் தூண்டுவதாக இருக்கின்றன.

காம்பெக்ட் எஸ்யூவி

காம்பெக்ட் எஸ்யூவி

ஏ கிளாஸ், பி கிளாஸ், சிஎல்ஏ செடான் உள்ளிட்ட கார்களை போன்று காம்பெக்ட் டிசைனுடன் வரும் இந்த எஸ்யூவி எம்எஃப்ஏ பிளாட்ஃபார்மில் வடிவமைக்கப்படுகிறது.

வீல் பேஸ் மட்டும்

வீல் பேஸ் மட்டும்

ஹேட்ச்பேக் கார்களை போன்று வீல் பேஸ் மட்டும் ஒரே அளவை கொண்டிருக்கும். ஆனால், காரின் நீள, அகலம் அதிகமிருக்கும்.

எஞ்சின்

எஞ்சின்

சிஎல்ஏ கிளாஸ் செடான் காரில் இருக்கும் எஞ்சின் ஆப்ஷன்களை இந்த காரில் பயன்படுத்தப்படும் என்று தெரிகிறது. ஆனால், இதுபற்றி பென்ஸ் இதுவரை தகவல் எதையும் வெளியிடவில்லை.

டிரைவ் சிஸ்டம்

டிரைவ் சிஸ்டம்

பென்ஸ் நிறுவனத்தின் 4 மேட்டிக் சிஸ்டத்துடன்இந்த கார் ஃபரண்ட் வீல் மற்றும் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட மாடல்களில் கிடைக்கும். 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் துணை புரியும்.

இந்தியாவுக்கு...

இந்தியாவுக்கு...

இந்த புதிய ஜிஎல்ஏ கிளாஸ் எஸ்யூவி அடுத்த ஆண்டு இறுதியில் அல்லது 2015ம் ஆண்டு துவக்கத்தில் இந்தியாவில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிஎம்டபிள்யூ எக்ஸ்1 மற்றும் ஆடி க்யூ3, வால்வோ வி40 கிராஸ் கன்ட்ரி ஆகிய சொகுசு எஸ்யூவி கார்களுக்கு நேரடி போட்டியாக இருக்கும்.

Most Read Articles
English summary
The GLA Class compact SUV/Crossover, revealed as a concept earlier this year at the 2013 Shanghai Auto Show, can be described as a B Class with a raised ride height. Mercedes-Benz has now released a couple of sketches of the vehicle through its official Facebook page.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X