எக்கச்சக்க டிமான்ட்.. கூடுதல் ஏ கிளாஸ் கார்களை அனுப்ப பென்ஸ் கோரிக்கை!

இந்திய மார்க்கெட்டில் ஏ கிளாஸ் மற்றும் பி கிளாஸ் கார்களுக்கு நிலவும் எகிடுதகிடான தேவையை கருத்தில் கொண்டு கூடுதல் கார்களை அனுப்புமாறு தலைமையகத்திடம் பென்ஸ் இந்தியா கோரியுள்ளது.

கடந்த மே 30ந் தேதி பென்ஸ் ஏ கிளாஸ் காரும், கடந்த மாதம் 11ந் தேதி பி கிளாஸ் டீசல் மாடலும் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. இந்த இரண்டு கார்களும் இந்திய வாடிக்கையாளர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.

Benz A Class

இரு மாடல்களும் தற்போது ஜெர்மனியிலுள்ள ராஸ்டாட் ஆலையிலிருந்து உற்பத்தி செய்யப்பட்டு இந்தியாவுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.

இந்த நிலையில், இந்திய மார்க்கெட்டில் ஏ கிளாஸ் மற்றும் பி கிளாஸ் டீசல் கார்களுக்கு நிலவும் தேவையை கருத்தில் கொண்டு கூடுதல் ஒதுக்கீடு செய்து கார்களை அனுப்புமாறு ஜெர்மனி தலைமையகத்திடம் பென்ஸ் கோரிக்கை வைத்துள்ளது.

இதுதவிர, இந்த இரண்டு கார் மாடல்களையும் இந்தியாவிலேயே அசெம்பிள் செய்வது குறித்தும் பென்ஸ் பரிசீலித்து வருகிறது. அடுத்த ஆண்டு இதுகுறித்து இறுதி முடிவு எடுக்கப்பட உள்ளது.

Most Read Articles
English summary
Mercedes-Benz India is seeking an increase in the allocation of compact luxury cars, the A-class and B-class, from its parent plant in Germany for India, to meet the high demand for the two cars.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X