அடுத்தடுத்து டீசல் கார்களை அறிமுகப்படுத்த மினி திட்டம்

இந்தியாவில் டீசல் மாடல் இல்லாமல் காலந்தள்ள முடியாது என்பதை உணர்ந்து கொண்டுள்ள மினி பிராண்டு அடுத்தடுத்து டீசல் மாடல்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. கடந்த ஆண்டு இந்திய மார்க்கெட்டில் களமிறங்கிய மினி பிராண்டுக்கு தற்போது நேரடி போட்டிகள் அதிகம் இல்லை. இதனால், முதலாமாண்டு நன்றாக அமைந்தது.

ஆனால், நீண்ட கால அடிப்படையில் டீசல் மாடல் இல்லாமல் பெரிய அளவில் சாதிக்க முடியாது என்பதால் டீசல் கார்களை அறிமுகம் செய்ய மினி முடிவு செய்துள்ளது. முதலாவதாக கன்ட்ரிமேன் காரின் டீசல் மாடலை இன்னும் ஓரிரு மாதங்களில் அறிமுகம் செய்ய அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

தற்போது அராய் மையத்தில் மினி கன்ட்ரிமேன் டீசல் காருக்கான சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனால், விரைவில் கன்ட்ரிமேன் டி கார் டீசல் எஞ்சினுடன் அறிமுகமாக இருக்கிறது. இதைத்தொடர்ந்து, மினி கூப்பர் மற்றும் கூப்பர் எஸ் கார்களும் டீசல் மாடலில் அறிமுகப்படுத்த மினி பிராண்டு திட்டமிட்டுள்ளது.

சிறப்பம்சம்

சிறப்பம்சம்

தோற்றத்தில் ஒரே மாதிரி இருந்தாலும் மினி கார்களில் சற்று கூடுதல் இடவசதி கொண்ட மாடல் இது. இந்த ஆண்டு புதுப்பொலிவுடன் கன்ட்ரிமேன் காரை மினி பிராண்டு அறிமுகப்படுத்த இருக்கிறது.

 எஞ்சின்

எஞ்சின்

இந்த காரில் 2.0 லிட்டர் டர்போசார்ஜ்டு டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும்.

பவர்

பவர்

இந்த கார் 130 பிஎஸ் பவரையும், 300 என்எம் திருகு விசையையும் வெளிப்படுத்தும் திறனையும் கொண்டிருக்கும்.

இன்டிரியர்

இன்டிரியர்

தரமும், கவர்ச்சியும் இழைந்தோடும் மினி கார்களுக்கே உரிய தனித்துவத்தை படத்தில் காணலாம். இதன் பெரிய ஸ்பீடோமீட்டர் டயல்தான் மினி கார் என்பதை சட்டென உணர்த்துகிறது.

இருக்கை வசதி

இருக்கை வசதி

2+2 லேஅவுட் கொண்ட இந்த காரில் 4 பேர் தாராளமாக அமர்ந்து பயணம் செய்யலாம். மேலும், பின் இருக்கைகளை மடக்கி விரிக்கும் வசதியும் உள்ளது.

டாப் ஸ்பீடு

டாப் ஸ்பீடு

மணிக்கு அதிகபட்சம் 210 கிமீ வேகம் வரை செல்லும் திறன் கொண்டது.

Most Read Articles
English summary
Reports say Mini will be launching the Countryman diesel in India within the next couple of months. The Country man was always considered as an ideal car for Indian drivers from Mini's stables. However the fact that it was available only with petrol engines was considered as a deterrent.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X