மினி ஜான் கூப்பர் ஒர்க்ஸ் கான்செப்ட்.. இறுக அணைச்சி ஒரு உம்மா...!!

By Saravana

2014 மினி கூப்பர் கார் குறித்த தகவல்களை சமீபத்தில் வெளியிட்டிருந்தோம். தற்போதைய மினி கூப்பரைவிட வடிவத்தில் சற்று பெரிதாக வந்த அந்த மாடலின் அடிப்படையில்தான் புதிய மினி பிராண்டு கார்கள் வடிவமைத்து வெளியிடப்பட உள்ளது.

அந்த வகையில், 2014 மினி கூப்பர் கார் மாடலின் பெர்ஃபார்மென்ஸ் வெர்ஷனை மினி பிராண்டு அறிமுகம் செய்ய உள்ளது. தொழில்நுட்ப விபரங்கள், சிறப்பம்சங்கள் பற்றிய தகவல்களை வெளியிடாவிட்டாலும், இந்த காரின் கான்செப்ட் டிசைன் எப்படியிருக்கும் என்பதற்காக மினி நிறுவனம் வெளியிட்டிருக்கும் படங்களையும், கூடுதல் தகவல்களையும் ஸ்லைடரில் காணலாம்.

 அறிமுகம்

அறிமுகம்

மினி ஜான் கூப்பர் ஒர்க்ஸ் என்ற பெயரில் அழைக்கப்படும் இந்த புதிய காரின் கான்செப்ட் மாடல் ஜனவரியில் நடைபெற உள்ள டெட்ராய்ட் ஆட்டோ ஷோவில் பார்வைக்கு வைக்கப்பட உள்ளது.

தயாரிப்பு மாடல்

தயாரிப்பு மாடல்

படத்தில் இருக்கும் கான்செப்ட் காருக்கும், தயாரிப்பு நிலை மாடலுக்கும் அதிக வித்தியாசங்கள் இருக்காது என்று மினி கார் நிறுவனம் தெரிவித்துள்ளது.

வண்ணம்

வண்ணம்

இந்த கார் சாம்பல், வெள்ளை மற்றும் சிவப்பு வண்ணக் கலவை கொண்டதாக பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது.

 பாடி கிட்

பாடி கிட்

இது பெர்ஃபார்மென்ஸ் வெர்ஷன் என்பதால் கூடுதல் ஆக்சஸெரீஸ்கள் பொருத்தப்பட்டுள்ளன. இலகு எடை கொண்ட 18 இஞ்ச் அலாய் வீல்களும் கம்பீரத்தை பெற்று தருகின்றன.

எஞ்சின்

எஞ்சின்

இந்த காரில் பெரிய ஏர் இன்டேக்குகல், பானட்டிலும் ஏர்டேக் கொடுக்கப்பட்டிருப்பதால் அதிக சக்திவாய்ந்த ட்வின் டர்போசார்ஜ்டு எஞ்சின் இருக்கும் என்பது உறுதியாகியுள்ளது. இந்த எஞ்சின் 200 எச்பி பவர் கொண்டதாக இருக்கும்.

ஏரோடைனமிக் கிட்

ஏரோடைனமிக் கிட்

கூடுதல் ஏரோடைனமிக் கிடைக்கும் வகையில், பெரிய பம்பர், சைடு ஸ்கர்ட், ரியர் அப்ரான் உள்ளிட்ட ஆக்சஸெரீஸ்கள் பொருத்தப்பட்டிருக்கும்.

 ஸ்பாய்லர்

ஸ்பாய்லர்

அதிக வேகத்தில் கூடுதல் சமநிலையையும், ஏரோடைனமிக்ஸ் அளிக்கும் வகையில் ரியர் ஸ்பாய்லர் மற்றும் இதர ஆக்சஸெரீஸ்கள் இந்த காரில் சேர்க்கப்பட்டுள்ளன.

 ஹெட்லைட்

ஹெட்லைட்

இந்த காரில் எல்இடி ஹெட்லைட், கருப்பு நிற முன்பக்க கிரில், சிவப்பு நிற ரியர் வியூ கண்ணாடி உள்ளிட்டவை கவர்ச்சியை அள்ளித் தருகிறது.

 எக்சாஸ்ட் சிஸ்டம்

எக்சாஸ்ட் சிஸ்டம்

இந்த காரில் இரட்டை குழல் சைலென்சர் அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இதில், ஜான்கூப்பர் ஒர்க்ஸ் என்ற எழுத்துக்களும் பொறிக்கப்பட்டிருப்பதை காணலாம்.

செயலில் காட்டும் கார்

செயலில் காட்டும் கார்

தோற்றத்தில் மட்டுமல்ல, பெர்ஃபார்மென்சிலும் இந்த புதிய கார் பிச்சு உதறும் என மினி பிராண்டு தெரிவித்துள்ளது.

Most Read Articles
English summary
The BMW owned British car maker, Mini will showcase the first John Cooper Works branded performance version of the 2014 Cooper hatch. The model, dubbed the Mini John Cooper Works Concept, will be showcased for the first time at the Detroit Motor Show in January, 2014
Story first published: Thursday, December 19, 2013, 11:36 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X