லிட்டருக்கு 29.2 கிமீ மைலேஜ் தரும் மிட்சுபிஷியின் புதிய கார் அறிமுகம்!

லிட்டருக்கு 29.2 கிமீ மைலேஜ் தரும் மிட்சுபிஷியின் புதிய கார் ஜப்பான் மார்க்கெட்டில் விற்பனைக்கு வந்துள்ளது. நிசானுடன் இணைந்து இந்த புதிய காரை மிட்சுபிஷி வடிவமைத்தது.

மாருதி வேகன்ஆர் போன்று டால் பாய் கான்செப்ட்டில் வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த காரை நிசான் நிறுவனமும் விரைவில் விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது. மிட்சுபிஷி இகே வேகன் என்ற பெயரில் விற்பனைக்கு வந்திருக்கும் இந்த புதிய கார் குறித்த கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

இரு மாடல்கள்

இரு மாடல்கள்

இகே வேகன் மற்றும் இகே வேகன் கஸ்டம் ஆகிய இரண்டு மாடல்களில் கிடைக்கும். இதில், இகே கஸ்டம் தோற்றம் மற்றும் இன்டிரியரில் கூடுதல் கவர்ச்சி கொண்டதாக இருக்கிறது.

எஞ்சின்

எஞ்சின்

இந்த காரில் 657 சிசி(0.7லி) திறன் கொண்ட பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. சிவிடி ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் கிடைக்கும்.

பவர்

பவர்

இந்த கார் 49 எச்பி ஆற்றல் கொண்ட மாடலிலும், டர்போசார்ஜர் துணையுடன் 59 எச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் மாடலிலும் கிடைக்கும்.

 மைலேஜ்

மைலேஜ்

இந்த கார் லிட்டருக்கு 29.2 கிமீ மைலேஜ் தரும் என மிட்சுபிஷி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 நிசானுடன் கூட்டு தயாரிப்பு

நிசானுடன் கூட்டு தயாரிப்பு

டால் பாய் கான்செப்ட்டில் புதிய காரை நிசான்-மிட்சுபிஷி நிறுவனங்கள் இணைந்து உருவாக்கியிருக்கின்றன.

இடவசதி

இடவசதி

இதன் பின் இருக்கையை மடக்கிக் கொள்ள முடியும்.

டில்ட் ஸ்டீயரிங்

டில்ட் ஸ்டீயரிங்

3 ஸ்போக் கொண்ட இதன் ஸ்டீயரிங்கை தேவைக்கேற்ப அட்ஜெஸ்ட் செய்யலாம்.

டேஷ்போர்டு

டேஷ்போர்டு

இதன் இன்டிரியரும் மிகவும் பிரிமியமாக இருக்கும் வகையில் டிசைன் செய்யப்பட்டுள்ளது.

இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர்

இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர்

இரட்டை டயல்களுடன் மிக தெளிவாக தெரியும் வகையில் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர் டிசைன் செய்யப்பட்டுள்ளது.

கியர் லிவர்

கியர் லிவர்

சென்ட்ரல் கன்சோலின் கீழே கியர் லிவர் பொருத்தப்பட்டு இருக்கிறது.

இன்போடெயின்மென்ட் சிஸ்டம்

இன்போடெயின்மென்ட் சிஸ்டம்

இன்போடெயின்மென்ட் சிஸ்டத்தில் பொழுதுபோக்கு மற்றும் நேவிகேஷன் வசதிகளை ஒருங்கே பெற முடியும்.

ரியர் வியூ கேமரா

ரியர் வியூ கேமரா

பின்புறம் காரை நகர்த்தும்போது பொருட்களை தெளிவாக பார்க்கும் வகையிலான ரியர் வியூ கேமரா பொருத்தப்பட்டு உள்ளது. இதனை காருக்குள் இருக்கும் ரியர் வியூ மிரரின் ஒரு ஓரத்தில் டிஜிட்டல் திரையில் பார்த்து ரிவர்ஸ் எடுக்க முடியும்.

இருக்கை வசதி

இருக்கை வசதி

இந்த காரில் 4 பேர் அமர்ந்து செல்லலாம்.

நிசான் டேஸ்

நிசான் டேஸ்

மிட்சுபிஷி விற்பனைக்கு விட்டுள்ள இதே கார்களை ரீபேட்ஜ் செய்து டேஸ் மற்றும் ஹைவே ஸ்டார் என்ற பெயர்களில் நிசான் விரைவில் ஜப்பானில் விற்பனைக்கு கொண்டு வர உள்ளது.

விலை

விலை

இகே வேகன் மாடல் 10,600 டாலர் விலையிலும், 13,500 டாலர் விலையிலும் கிடைக்கும்.

Most Read Articles
English summary
Mitsubishi has revealed a new generation of small car, eK. Check out, Mitsubishi's eK's features, specs and awesome interior through pictures.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X