கார் மார்க்கெட்டில் சமீபத்திய புதிய வரவுகள் - சிறப்பு தொகுப்பு

Written By:

கார் மார்க்கெட்டில் சுணக்க நிலை காணப்பட்டாலும், தயாரிப்பாளர்கள் கூடுதல் முதலீடுகளை தொடர்ந்து செய்து வருகின்றனர். மேலும், வாடிக்கையாளர்களை கவர்வதற்காக புதிய மாடல்களை தொடர்ந்து இறக்கி வருகின்றன.

மேலும், பண்டிகை காலத்தையொட்டி புதிய மாடல்களின் வரவும் அதிகரித்துள்ளது. அந்த வகையில், இந்த மாதம் விற்பனைக்கு வந்த புதிய மாடல்கள் பற்றிய விபரத்தை சுருக்கமான தகவல்களுடன் இந்த சிறப்பு செய்தித் தொகுப்பில் காணலாம்.

மாருதி ஸ்டிங்ரே

வேகன் ஆர் காரில் மாறுதல்களை செய்து ஸ்டிங்ரே என்ற பெயரில் ரூ.50,000 வரை கூடுதல் விலையில் பிரிமியம் மாடலாக அறிமுகம் செய்துள்ளது மாருதி. ரூ.4.09 லட்சம் முதல் ரூ.4.67 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் வந்துள்ளது. 1.0 லிட்டர் கே சீரிஸ் பெட்ரோல் எஞ்சினுடன் வந்திருக்கும் இந்த கார் லிட்டருக்கு 20.51 கிமீ மைலேஜ் தரும் என்று சான்றளிக்கப்பட்டிருக்கிறது. வேகன் ஆர் காரைவிட ரூ.50,000 வரை கூடுதல் விலையில் வந்துள்ளது.

லேண்ட்ரோவர் ஃப்ரீலேண்டர் 2

லேண்ட்ரோவர் ஃப்ரீலேண்டர் 2 சொகுசு எஸ்யூவியில் சில வசதிகளை குறைத்து ரூ.2 லட்சம் வரை குறைவான விலையில் புதிய பேஸ் மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. சொகுசு வசதிகள் குறைக்கப்பட்டாலும், பாதுகாப்பு வசதிகள் குறைக்கப்படாமல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஃபோக்ஸ்வேகன் கிராஸ் போலோ

ஆஃப்ரோடு பிரியர்களுக்கான போலோ மாடலை ஃபோக்ஸ்வேகன் இறக்கியிருக்கிறது. கிராஸ்போலோ என்ற பெயரில் கூடுதல் ஆஃப் ரோடு ஆக்சஸெரீஸ்களுடன் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. 1.2 லிட்டர் டீசல் எஞ்சினுடன் வந்திருக்கும் இந்த கார் ரூ.7.75 லட்சம் விலையில் போலோவின் டாப் என்ட் மாடலாக விற்பனைக்கு கிடைக்கிறது.

ஆடி க்யூ3 எஸ்

பென்ஸ் ஏ கிளாஸ் வரவு ஆடி நிறுவனத்துக்கு அதிக நெருக்கடியை கொடுத்தது. இதையடுத்து, வசதிகளையும், விலையையும் குறைத்து க்யூ3 எஸ்யூவியின் புதிய பேஸ் மாடலை ஆடி விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. க்யூ3 ஸ்போர்ட் என்ற பெயரில் வந்திருக்கும் இந்த எஸ்யூவி ரூ.24.99 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு விடப்பட்டுள்ளது.

ரோல்ஸ்ராய்ஸ் ரயீத்

இதுவரை ரோல்ஸ்ராய்ஸ் கார்களின் மீது வாடிக்கையாளர் மனதில் பதிந்திருந்த தோற்ற முத்திரையை மாற்றும் விதத்தில் புத்தம் புதிய கூபே டிசைனுடன் கூடிய ரயீத் கார் இந்தியாவிலும் விற்பனைக்கு வந்துவிட்டது. ரூ.4.6 கோடி விலையில் விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சஃபாரி ஸ்ட்ராம் - சிறப்பு பதிப்பு

அவுட்டோர் செல்வதற்கான வசதிகளுடன் கூடிய சிறப்பு பதிப்பு சஃபாரி ஸ்ட்ராம் எஸ்யூவியை டாடா விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. பின்புறத்தில் கூடுதல் லக்கேஜ் கேரியர், சைக்கிள் கேரியர், டென்ட் உள்ளிட்டவற்றை நிரந்தர அம்சமாக கொண்டு வந்திருக்கும் இந்த சிறப்பு பதிப்பு சஃபாரி ஸ்ட்ராம் ரூ.10.86 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கும்.

நிசான் டெரானோ

டஸ்ட்டரின் ரீபேட்ஜ் மாடலான நிசான் டெரானோ மும்பையில் நடந்த வண்ணமிகு விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. அக்டோபர் முதல் விற்பனை செய்யப்பட இருக்கும் இந்த எஸ்யூவி பெட்ரோல் மற்றும் டீசலில் கிடைக்கும். விலை ரூ.10 லட்சத்திற்குள் இருக்கும் என்று நிசான் தெரிவித்துள்ளது. அதேசமயம், டஸ்ட்டரைவிட கூடுதல் விலையில் வருகிறது.

English summary
Despite the economic recession prevailing in the country, carmakers seems to give no cease to their investments. Here are some of the new launches in India. You can read it in Tamil.
Please Wait while comments are loading...

Latest Photos