இந்த மாதம் ரிலீசாகும் கார் மாடல்கள் - சிறப்பு தொகுப்பு

புத்தாண்டு துவங்கி புயல் வேகத்தில் ஒரு மாதம் முடிவடைந்துவிட்ட நிலையில், இந்த ஆண்டு விற்பனை இலக்கை எட்டுவதற்கும், வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்ப்பதற்கும் புதிய மாடல்களை அறிமுகப்படுத்துவதில் கார் நிறுவனங்கள் தீவிரமாக இறங்கியுள்ளன.

அந்த வகையில், வாடிக்கையாளர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட், ஹோண்டா சிஆர்வி ஆகிய முக்கிய மாடல்கள் இந்த மாத ரிலீஸ் பட்டியலில் உள்ளன. இந்த மாதம் ரிலீசாகும் விபரங்களை இந்த சிறப்பு தொகுப்பில் காணலாம்.

செயில் செடான்

செயில் செடான்

கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட செயில் ஹேட்ச்பேக் காரின் செடான் வெர்ஷன். அதிக இடவசதி, 370 லிட்டர் கொள்ளளவு கொண்ட பூட்ரூம் ஆகியவை கூடுதல் பலம். 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.3 லிட்டர் டீசல் மாடலில் கிடைக்கும். ரூ.4.99 லட்சம் முதல் பெட்ரோல் மாடலும், ரூ.6.29 லட்சம் முதல் டீசல் மாடலிலும் விற்பனைக்கு கிடைக்கும்.

மஹிந்திரா இ2ஓ

மஹிந்திரா இ2ஓ

உலகின் மிகப்பெரிய கார் மார்க்கெட்டாக திகழும் இந்தியாவில் சிறந்த எலக்ட்ரிக் கார் இல்லாத குறையை தீர்க்க வரும் மாடல் இது. இந்த காரில் 4 பேர் பயணம் செய்யலாம். 39.4 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் எலக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்பட்டிருக்கும். ஒருமுறை சார்ஜ் செய்தால் 100 கிலோமீட்டர் தூரம் வரை பயணிக்க முடியும். ரூ.6 லட்சம் விலையில் விற்பனைக்கு வரும் என தெரிகிறது.

ஹோண்டா சிஆர்வி

ஹோண்டா சிஆர்வி

புதுப்பொலிவுடன் கூடிய புதிய சிஆர்வி பிரிமியம் எஸ்யூவியை விரைவில் விற்பனைக்கு கொண்டு வருகிறது ஹோண்டா. டியூனிங் செய்யப்பட்ட 2.0 லிட்டர் மற்றும் 2.4 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மாடல்களில் மட்டுமே விற்பனைக்கு கிடைக்கும். ஆல்வீல் டிரைவ் , மேனுவல் கியர் பாக்ஸ் மற்றும் ஆட்டோமேட்டிக் வேரியண்ட்களில் வருகிறது. பிப்ரவரி 12ந் தேதி புதிய சிஆர்வி அறிமுகமாகிறது.

பிஎம்டபிள்யூ எக்ஸ்1

பிஎம்டபிள்யூ எக்ஸ்1

மேம்படுத்தப்பட்ட மாடலாக வருகிறது புதிய எக்ஸ்1. டிசைனில் மட்டுமே மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. தற்போது விற்பனை செய்யப்பட்டு வரும் அதே எஞ்சின் ஆப்ஷன்களில் வருகிறது. பிஎம்டபிள்யூவின் குறைந்த விலை கொண்ட மாடல் என்பதோடு, இளைஞர்களை கவரும் அம்சங்கள் ஏராளம். எனவே, வரும் 14ந் தேதி காதலர் தினத்தன்று இந்த காரை அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்

இந்தா அந்தா என்று ஈக்கோஸ்போர்ட் அறிமுகத்தை தள்ளிப்போட்டு போக்கு காட்டி வருகிறது ஃபோர்டு. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த மாடலை ஒரு வழியாக இந்த மாதம் அறிமுகம் செய்ய ஃபோர்டு திட்டமிட்டுள்ளது. டெல்லி டீலர்களுக்கு ஈக்கோஸ்போர்ட் அடைந்து விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 1.0 லிட்டர் ஈக்கோஸ்பூஸ்ட் எஞ்சின் மற்றும் ஃபியஸ்ட்டாவில் பொருத்தப்பட்டிருக்கும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சினுடன் வருகிறது. இந்தியாவில் மட்டும் வரிச்சலுகைக்காக 4 மீட்டருக்குள் சுருக்கப்பட்ட ஈக்கோஸ்போர்ட் விற்பனைக்கு வருகிறது. ஈக்கோஸ்போர்ட் அறிமுக தேதி குறித்த ஃபோர்டு இதுவரை உறுதிப்படுத்த வில்லை.

Most Read Articles
English summary
Car companies are gearing up to launch new car models in this month. Here is our monthly list of new cars that you can expect to see in the showrooms near you over the next one month.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X