புதிய தலைமுறை ஜாகுவார் கார்கள் தயாரிப்பு தீவிரம்!

By Saravana

அடுத்த தலைமுறை எக்ஸ்எஃப் மற்றும் எக்ஸ்ஜே கார்களின் வடிவமைப்பு ஏற்கனவே துவங்கிவிட்டதாக ஜாகுவார் டிசைன் பிரிவு தலைவர் இயான் கல்லம் தெரிவித்துள்ளார்.

தற்போது விற்பனையில் இருக்கும் எக்ஸ்எஃப் கார் 2008ல் அறிமுகம் செய்யப்பட்டது. 2011ம் ஆண்டு மேம்படுத்தப்பட்ட மாடல் அறிமுகம் செய்யப்பட்டது.

Jaguar XJ

இந்த நிலையில், முற்றிலும் புதிய எக்ஸ்எஃப் காரை 2016ல் வெளியிட ஜாகுவார் முடிவு செய்துள்ளது. சிஎக்ஸ்-17 கான்செப்ட் கார் அடிப்படையில் இந்த புதிய கார் வடிவமைக்கப்படுகிறது. அடுத்த தலைமுறை எக்ஸ்எஃப் கார் பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் காருக்கு போட்டியாக வருகிறது. இது சொகுசு சலூன் ரக காராக இருக்கும்.

Jaguar XJ

அடுத்த ஆண்டு மேம்படுத்தப்பட்ட எக்ஸ்ஜே காரை ஜாகுவார் அறிமுகம் செய்ய உள்ளது. அடுத்த தலைமுறை எக்ஸ்ஜே காரின் வடிவமைப்பு துவங்கிவிட்டாலும், மேம்படுத்தப்பட்ட மாடல் இடையில் அறிமுகம் செய்யப்பட இருப்பதால், புதிய தலைமுறை எக்ஸ்ஜே கார் வருதற்கு சற்று கால தாமதமாகலாம் என்று கருதப்படுகிறது.

Most Read Articles
English summary
The next generation Jaguar XF and XJ saloons are already under development. The update comes straight from the mouth of Jaguar design director, Ian Callum.
Story first published: Tuesday, December 10, 2013, 15:05 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X