பிரிமியம் அம்சங்களுடன் வருகிறது புதிய நிசான் எவாலியா

ஐரோப்பிய நாடுகளில் பிரபலமான ஜப்பானிய தயாரிப்பான எவாலியா எம்பிவி கார் இந்தியாவில் எதிர்பார்த்த அளவு சோபிக்கவில்லை. குடும்பத்திற்கு ஏற்ற தனி நபர் மார்க்கெட்டில் நிலைநிறுத்தப்பட்ட இந்த காரின் தோற்றம் இந்திய வாடிக்கையாளர்களை அவ்வளவாக கவரவில்லை. இதனால், ஷோரூமை விட்டு ஒரு எவாலியாவை கிளப்புவதற்கு பணியாளர்கள் மிகுந்த சிரத்தை எடுக்க வேண்டிய நிலை இருந்து வருகிறது.

கடந்த 3 மாதங்களின் நிலவரப்படி, மாதத்திற்கு சராசரியாக 6,000 இன்னோவா கார்கள் விற்பனை செய்து வரும் நிலையில், மாதத்திற்கு சராசரியாக 175 எவாலியா கார்கள் மட்டுமே விற்பனையாகின்றன. இந்த நிலையில், வாடிக்கையாளர்களை கவரும் விதமாக கூடுதல் பிரிமியம் அம்சங்களுடன் புதிய எவாலியாவை விற்பனைக்கு கொண்டு வருவதற்கு நிசான் திட்டமிட்டுள்ளது.

 தோற்றம்

தோற்றம்

வெளிப்புறத்தில் மிகச் சிறிய மாற்றங்களுடன் புதிய எவாலியா வருகிறது.

 பவர் விண்டோஸ்

பவர் விண்டோஸ்

எவாலியாவின் நடுவரிசையில் பவர் விண்டோஸ் வசதி இல்லாதது குறையாக இருந்தது. இதற்காக, தற்போது நடுவரிசை கதவு கண்ணாடி பவர் விண்டோஸ் வசதி கொண்டதாக இருக்கும். மேலும், கடைசி வரிசை பட்டர்ஃப்ளை கண்ணாடிகளும் மாற்றப்பட உள்ளது.

கேப்டன் சீட்

கேப்டன் சீட்

எவாலியாவின் நடு வரிசையில் இருக்கும் பெஞ்ச் இருக்கையை தூக்கிவிட்டு கேப்டன் இருக்கையை பொருத்த நிசான் முடிவு செய்துள்ளது.

அப்ஹோல்ஸ்டரி

அப்ஹோல்ஸ்டரி

புதிய எவாலியாவில் இருக்கை, உட்புற பிளாஸ்டிக் பாகங்கள், அப்ஹோல்ஸ்டரி ஆகியவை உயர் தரம் கொண்டதாக இருக்கும்.

விலை உயர்வு

விலை உயர்வு

அதிக பிரிமியம் கொண்டதாக மாற்றப்பட்டு வரும் புதிய எவாலியாவின் விலையை சிறிது அதிகரிக்கவும் நிசான் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

நிசான் எவாலியா
நிசான் எவாலியா
நிசான் எவாலியா
நிசான் எவாலியா
நிசான் எவாலியா
நிசான் எவாலியா
நிசான் எவாலியா
நிசான் எவாலியா
நிசான் எவாலியா
Most Read Articles
English summary
Japan car maker Nissan is clearly knows what is hampering the Evalia's growth and is ready to take remedial steps. AutocarIndia has learnt that a slightly redesigned Evalia, with a premium interior, will be launched during the festival of lights.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X