குறைந்த விலை டீசல் மைக்ரா: நிசான் பரிசீலனை

By Saravana

டீசல் எஞ்சின் மாடலிலும் மைக்ரா ஆக்டிவ் காரை விற்பனைக்கு கொண்டு வருவதற்கு நிசான் மோட்டார்ஸ் பரிசீலித்து வருகிறது.

மிகவும் சவாலான விலையில் மைக்ரா ஆக்டிவ் காரை சமீபத்தில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது நிசான். பெட்ரோல் எஞ்சினுடன் 4 வேரியண்ட்களில் புதிய மைக்ரா ஆக்டிவ் விற்பனைக்கு கிடைக்கும்.

Nissan Micra Active

வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ள இந்த கார் விற்பனையில் முன்னிலை வகிக்கும் பல ஹேட்ச்பேக் கார்களுக்கு கடும் நெருக்கடியை கொடுத்துள்ளது.

இந்த நிலையில், பிரபல ஆட்டோமொபைல் இணையதளத்துக்கு பேட்டியளித்துள்ள நிசான் மோட்டார்ஸ் இந்தியா தலைவர் கென்சிரோ யோமுரா, டீசல் எஞ்சினுடன் மைக்ரா ஆக்டிவ் மாடலை அறிமுகம் செய்வது குறித்து பரிசீலித்து வருவதாக தெரிவித்துள்ளார்.

அடுத்த ஆண்டு மைக்ரா ஆக்டிவ் கார் டீசல் மாடலிலும் விற்பனைக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பீட் டீசல், டாடா விஸ்டா டீசல் கார்களுக்கு இந்த புதிய மைக்ரா ஆக்டிவ் டீசல் கடும் நெருக்கடியை ஏற்படுத்தலாம்.

Most Read Articles
English summary
Japanese car maker Nissan is planning to bring out a diesel variant for the Micra Active model.
Story first published: Tuesday, July 9, 2013, 13:09 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X