மைக்ராவின் பெர்ஃபார்மென்ஸ் எடிசன்: இந்தியா வருமா?

மைக்ராவின் சக்திவாய்ந்த நிஸ்மோ பெர்ஃபார்மென்ஸ் கார்களை ஜப்பானில் அறிமுகம் செய்துள்ளது நிசான். நம்மூரில் விற்பனை செய்யப்படும் மைக்ரா கார் ஜப்பான் மார்க்கெட்டில் மார்ச் என்ற பெயரில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் பெர்ஃபார்மென்ஸ் வேரியண்ட்களாக நிஸ்மோ மற்றும் நிஸ்மோ எக்ஸ் ஆகியவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இப்போது முன்பதிவு மட்டும் துவங்கப்பட்டுள்ளது. வரும் டிசம்பர் மாதம் இந்த இரண்டு கார்களின் டெலிவிரி துவங்கப்பட உள்ளது. பவர்ஃபுல் எஞ்சின், பிரத்யேக சஸ்பென்ஷன், விசேஷ பிரேக் சிஸ்டம் உள்ளிட்டவற்றுடன் விற்பனைக்கு வந்துள்ள இந்த புதிய காரின் சற்று விரிவான விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

எஞ்சின்

எஞ்சின்

நிஸ்மோ காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடன் எக்ஸ்ரோனிக் சிவிடி ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் பொருத்தப்பட்டிருக்கும். இது 80 பிஎஸ் பவரையும், 106 என்எம் டார்க்கையும் அளிக்கும். இரண்டாவது நிஸ்மோ எஸ் காரில் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். இந்த எஞ்சின் 116 பிஎஸ் பவரையும் 156 என்எம் டார்க்கையும் அளிக்கும். 5 ஸ்பீடு குயிக் ஷிப்ட் மேனுவல் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டு இருக்கும்.

கூடுதல் அம்சங்கள்

கூடுதல் அம்சங்கள்

பிஸ்போக் எக்ஸாசாஸ்ட் சிஸ்டம், உறுதிமிக்க சஸ்பென்ஷன், அதிக பாதுகாப்பை தரும் விசேஷ பிரேக்கிங் சிஸ்டம், கூடுதல் உறுதி கொண்ட பாடி, ஆன்டி ரோல்பார், பிரிட்ஜஸ்டோன் பொட்டென்ஸா டயர்கள், 16 இஞ்ச் அலாய் வீல்கள் ஆகியவை கூடுதல் அம்சங்கள்.

ஸ்பெஷல் பாடி கிட்

ஸ்பெஷல் பாடி கிட்

புதிய பம்பர், முன்பக்க கிரில், சைடு சில் புரொடெக்டர்கள், ரியர் ஸ்பாய்லர், சிவப்பு வண்ணம் தடவப்பட்ட ரியர் வியூ மிரர்கள், எல்இடி பகல்நேர ரன்னிங் விளக்குகள் ஆகியவை வெளிப்புற கம்பீரத்தை கூட்டுகின்றன.

உட்பக்க அம்சங்கள்

உட்பக்க அம்சங்கள்

அல்கான்ட்ரா உறை போடப்பட்ட ஸ்டீயரிங் வீல், பியானோ பிளாக் இன்டிரியர், சிறப்பு டிசைன் கொண்ட பெடல்கள், கியர் ஷிப்ட் நாப் ஆகியவையும் சிறப்பு சேர்க்கின்றன.

வண்ணங்கள்

வண்ணங்கள்

கருப்பு, சில்வர், வெள்ளை ஆகியவற்றுடன் பிரத்யேக இன்டிரியர் டிசைனில் கிடைக்கிறது நிஸ்மோ பெர்ஃபார்மென்ஸ் வேரியண்ட்கள்.

 டாப் ஸ்பீடு

டாப் ஸ்பீடு

மணிக்கு 220 கிமீ வேகம் வரை தொட்டுவிடும் வகையிலான ஸ்பீடோமீட்டர் கொடுக்கப்பட்டுள்ளது.

 இந்தியா வருமா?

இந்தியா வருமா?

இந்தியாவில் பெர்ஃபார்மென்ஸ் கார்களை விற்பனைக்கு கொண்டு வருவதை நிசான் தவிர்த்து வருகிறது. ஆனால், தற்போது பவர்ஃபுல் ஹேட்ச்பேக் கார்களுக்கான மார்க்கெட் மெல்ல வளர்ச்சி கண்டு வருகிறது. இதனை கருத்தில்கொண்டு இந்த காரை இந்தியாவில் அறிமுகப்படுத்த நிசான் பரிசீலனை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
மேலும்... #nissan #four wheeler #நிசான்
English summary
Nissan has announced Nismo variants of the recently facelifted March (aka Micra) for Japan Market.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X