கிராண்ட் ஐ10 வருகை... அவசரமாக குறைந்த விலை மைக்ரா டீசல் அறிமுகம்!

By Saravana

கிராண்ட் ஐ10 கார் டீசல் மாடலிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதை எதிர்கொள்ளும் விதமாக மைக்ரா டீசல் காரின் குறைந்த விலை பேஸ் வேரியண்ட் இன்று விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

எக்ஸ்இ என்ற பெயரில் வசதிகள் குறைக்கப்பட்ட இந்த பேஸ் வேரியண்ட் இன்று முதல் விற்பனைக்கு கிடைக்கும். புதிய பேஸ் வேரியண்ட் மைக்ரா டீசல் காரில் செய்யப்பட்டிருக்கும் மாற்றங்கள் பற்றிய முழுமையான தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

வெளிப்புற மாற்றங்கள்

வெளிப்புற மாற்றங்கள்

பாடி கலர் ரியர் வியூ கண்ணாடிகள், பம்பர், டோர் ஹேண்டில்கள், குரோம் கிரில், எல்இடி டெயில் லைட் கிளஸ்ட்டர், அலாய் வீல்கள் மற்றும் ஃபாலோ மீ ஹெட்லைட்டுகள் ஆகியவை இருக்காது.

நோ பவர் விண்டோஸ்

நோ பவர் விண்டோஸ்

உட்புறத்தில் பவர் விண்டோஸ், கீ லெஸ் என்ட்ரி, கப் ஹோல்டர்கள், பாட்டில் ஹோல்டர்கள் உள்ளிட்டை இருக்காது.

இன்டிரியரில் மாற்றங்கள்

இன்டிரியரில் மாற்றங்கள்

இன்டிரியரில் குரோம் பூச்சு பாகங்களுக்கு பதிலாக பிளாஸ்டிக் பாகங்களாக மாறிவிட்டன. முன்பக்க ஸ்பீக்கர்களும் கிடையாது. அதேவேளை, மேனுவல் ஏசி, டில்ட் ஸ்டீயரிங் மற்றும் டிரைவர் சைடு ஏர்பேக் நிரந்தர அம்சமாக இடம் பெற்றிருக்கிறது.

விலை வித்தியாசம்

விலை வித்தியாசம்

இப்போது விற்பனையில் இருந்து வந்த எக்ஸ்எல் பேஸ் வேரியண்ட் ரூ.6 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், மேற்கண்ட வசதிகள் மற்றும் சிறப்பம்சங்களை குறைத்து எக்ஸ்எல் வேரியண்ட்டைவிட ரூ.43,000 குறைவான விலையில் இந்த புதிய கார் விற்பனைக்கு வந்துள்ளது. (ஹூண்டாய் கிராண்ட் ஐ10 டீசல் கார் ரூ.5.23 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு வந்துள்ளது)

வண்ணங்கள்

வண்ணங்கள்

பச்சை, நீலம், சில்வர், வெள்ளை, கருப்பு மற்றும் சிவப்பு ஆகிய 6 வண்ணங்களில் கிடைக்கும்.

எஞ்சின்

எஞ்சின்

இந்த காரில் 64 பிஎஸ் பவரையும், 160 என்எம் டார்க்கையும் அளிக்கும் கே9கே டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கிறது.

மைலேஜ்

மைலேஜ்

லிட்டர் டீசலுக்கு 23.08 கிமீ மைலேஜ் தரும் என அராய் சான்று தெரிவிக்கிறது.

Most Read Articles
English summary
Japanese car maker Nissan has launched a new base diesel XE variant for the recently launched Micra facelift, which is priced at Rs 5.57 lakh (ex-showroom, Delhi).
Story first published: Wednesday, September 4, 2013, 15:46 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X