குறைந்த விலை மைக்ராவை அறிமுகப்படுத்த நிசான் ஆயத்தம்

By Saravana
Nissan Micra
வசதிகளை பிடுங்கிவிட்டு குறைந்த விலை மைக்ரா காரை விரைவில் விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது நிசான்.

மார்க்கெட்டில் இருக்கும் சிறந்த ஹேட்ச்பேக் கார்களில் ஒன்று மைக்ரா என்றாலும் விற்பனை எதிர்பார்த்த அளவு கைகொடுக்கவில்லை. இதையடுத்து, வாடிக்கையாளர்களை கவர்வதற்காக குறைந்த விலை மைக்ரா காரை நிசான் அறிமுகப்படுத்த இருப்பதாக சில மாதங்களுக்கு முன் செய்தி வெளியிட்டிருந்தோம்.

இந்த நிலையில், குறைந்த விலை மைக்ராவை அறிமுகப்படுத்த தற்போது நிசான் ஆயத்தமாகி வருகிறது. மைக்ரா ஆக்டிவ் என்ற பெயரில் வரும் இந்த புதிய கார் சமீபத்தில் சென்னை சுற்று வட்டாரங்களில் சோதனை செய்யப்பட்டுள்ளது. ஏர்பேக், கீ லெஸ் என்ட்ரி, கிளைமேட் கன்ட்ரோல் ஏசி உள்ளிட்ட வசதிகள் புதிய மைக்ராவில் இருக்காது.

மேலும், ஹெட்லைட், டெயில் லைட்டுகளிலும் மாற்றங்களை கண்டிருக்கிறது. தற்போது விற்பனை செய்யப்படும் மைக்ரா காரின் பேஸ் வேரியண்ட்டை விட இந்த கார் ரூ.50,000 வரை விலை குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த மாதம் இந்த கார் விற்பனைக்கு வரலாம் என்று தகவல்கள் கூறுகின்றன.

Most Read Articles
English summary
Japanese car maker Nissan is all set to launch Low cost Micra variant in Indian market soon. The new variant christined as Micra Activ and will miss out some standard features like driver side airbag, key less entry and climate control AC, sources said.
Story first published: Saturday, March 23, 2013, 11:25 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X