புதிய அபே சிட்டி ஆட்டோரிக்ஷாவை அறிமுகப்படுத்திய பியாஜியோ

By Saravana

நகர்ப்புறங்களுக்கு ஏற்ற புதிய ஆட்டோரிக்ஷாவை பியாஜியோ நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.

இத்தாலியை சேர்ந்த பியாஜியோ நிறுவனம் ஏற்கனவே அபே என்ற பெயரில் ஷேர் ஆட்டோ மற்றும் லோடு ஆட்டோ ரிக்ஷாக்களை விற்பனை செய்து வருகிறது. இந்த நிலையில், நகர்ப்புறத்துக்கு ஏற்ற அம்சங்களுடன் அபே சிட்டி என்ற பெயரில் புதிய ஆட்டோரிக்ஷாவை தற்போது விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.

Piaggio Ape City

எல்பிஜி, சிஎன்ஜி மற்றும் பெட்ரோலில் இயங்கும் எஞ்சின் ஆப்ஷன்களுடன் புதிய ஆட்டோரிக்ஷா கிடைக்கும். அதிக இடவசதியுடன், பிற ஆட்டோரிக்ஷாக்களை விட 10 சதவீதம் கூடுதல் எரிபொருள் சிக்கனம் கொண்டதாக இருக்கும்.

இந்த ஆட்டோரிக்ஷாவில் பொருத்தப்பட்டிருக்கும் 200சிசி எஞ்சின் சிறந்த பிக்கப்பை கொடுக்கும் என பியாஜியோ தெரிவித்துள்ளது. எல்பிஜி வேரியண்ட் ரூ.1.10 லட்சத்திலும், சிஎன்ஜி ரூ.1.23 லட்சத்திலும், பெட்ரோல் வேரியண்ட் ரூ.1.25 லட்சத்திலும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Most Read Articles
English summary
Piaggio India has launched the all new range of three wheeler - apé City rickshaw. Piaggio apé City will be offered in a choice of three fuel options – LPG/CNG/Petrol. It is powered by a 3 valve 200 cc engine, which is being introduced in the three wheeler segment in India for the first time. Price of the LPG variant is at INR 1.10 lakhs, CNG is at INR 1.23 lakhs, and petrol version is priced at INR 1.25 lakhs. All prices here are ex-showroom, Maharashtra.
Story first published: Wednesday, March 13, 2013, 15:11 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X