ஜெர்மனி ராணுவத்துக்காக மிலிட்டரி வாகனங்களை தயாரிக்கும் போலரிஸ்

ஜெர்மனி ராணுவத்துக்கு ஆஃப் ரோடு வாகனங்களை சப்ளை செய்வதற்கான ஆர்டரை போலரிஸ் பெற்றுள்ளது. ராணுவ பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் பல மாறுதல்களுடன் கூடிய எம்வி 850 ஏடிவி வாகனங்களை அந்த நிறுவனம் சப்ளை செய்ய உள்ளது.

அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் ராணுவத்துக்கு ஏற்கனவே ஆஃப் ரோடு வாகனங்களை போலரிஸ் சப்ளை செய்து வருகிறது. இந்த வரிசையில் தற்போது ஜெர்மனி ராணுவத்திடம் ஆஃப் ரோடு வாகனங்களை சப்ளை செய்வதற்கு ஒப்பந்தம் செய்துள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

லைட் வெயிட்

லைட் வெயிட்

எம்வி 850 ஆஃப் ரோடு வாகனங்கள் நடைமுறைக்கு மிக சாத்தியமுள்ள, இலகு எடை கொண்ட ஏடிவி(All Terrain Vehicle) ரகத்தை சேர்ந்தவை.

முதலில்...

முதலில்...

முதலில் அமெரிக்க ராணுவத்துக்காக எம்வி 850 ஏடிவி வாகனத்தை போலரிஸ் தயாரித்தது. எந்தவொரு கரடு முரடான சாலைகளிலும் வீரர்களை கொண்டு செல்வது, பொருட்களை எடுத்துச் செல்வதற்கு இந்த வாகனங்கள் மிக சிறப்பானதாக சொல்லப்படுகிறது.

ப்பூ... இவ்வளவுதானா

ப்பூ... இவ்வளவுதானா

எல்லாம் சரி. ஆனால், இந்த வாகனத்தின் எரிபொருள் டேங்க் வெறும் 4.5 லிட்டர் மட்டுமே கொள்ளளவு கொண்டது.

சுமை திறன்

சுமை திறன்

இந்த ஏடிவியின் பின்புறத்தில் இருக்கும் இரும்பாலான தட்டில் 272 கிலோ எடையுடைய பொருட்களை வைக்க முடியும்.

சிறந்த வாகனம்

சிறந்த வாகனம்

போர் கால பயன்பாட்டுக்கு தேவையான சிறந்த, மதிப்பு மிக்க வாகனமாக எம்வி 850 இருக்கும் என போலரிஸ் பாதுகாப்பு வாகன தயாரிப்புப் பிரிவு பொது மேலாளர் ரிச் ஹாடட் தெரிவித்துள்ளார்.

Most Read Articles
English summary
Polaris Industries, the manufacturers of off road vehicles and ATVs in particular, has announced that it has received a contract from the German Army to build military ATVs. The company will build specially modified and highly rugged MV850 ATVs.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X