போர்ஷே கேயென் பிளாட்டினம் எடிசனுக்கு டீலர்களில் முன்பதிவு!

By Saravana

ஐரோப்பிய மார்க்கெட்டுக்கான ஸ்பெஷல் எடிசன் போர்ஷே கேயென் எஸ்யூவி சில தினங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது. பிளாட்டினம் எடிசன் என்ற பெயரிலான இந்த ஸ்பெஷல் எடிசன் மாடலை இந்தியாவிலும் விற்பனை செய்ய இருப்பதாக போர்ஷே உறுதி செய்துள்ளது.

இந்த நிலையில், புதிய பிளாட்டினம் எடிசன் எஸ்யூவிக்கு போர்ஷே டீலர்களில் முன்பதிவு செய்யப்படுவதாக தகவல்கள் கூறுகின்றன. கூடுதல் அம்சங்கள் மற்றும் எஞ்சினில் சிறிய மாற்றங்களுடன் வரும் இந்த புதிய ஸ்பெஷல் எடிசன் மாடல் குறித்த கூடுதல் தகவல்கள் ஸ்லைடரில் காத்திருக்கிறது.

ஏராள வண்ணங்கள்

ஏராள வண்ணங்கள்

இந்த புதிய ஸ்பெஷல் எடிசன் மாடலை வாடிக்கையாளர்கள் விரும்பிய வண்ணத்தில் தேர்வு செய்யும் விதமாக, சில்வர் மெட்டாலிக், மெட்டியோர் கிரே மெட்டாலிக், பசால்ட் பிளாக் மெட்டாலிக், மஹோகனி மற்றும் கராரா ஒயிட் மெட்டாலிக் உள்ளிட்ட பல வண்ணங்களில் கிடைக்கும்.

 அம்சங்கள்

அம்சங்கள்

பை ஸினான் ஹெட்லைட், 19 இஞ்ச் அலாய் வீல்கள் ஆகியவை வெளிப்புறத்திற்கு சிறப்பு சேர்க்கும் அம்சங்கள்.

இன்டிரியர்

இன்டிரியர்

உட்புறத்தின் பெரும்பாலான இடங்களை லெதர் பினிஷிங் ஆக்கிரமித்துள்ளது. இதுதவிர, போர்ஷே லோகோ கொண்ட மிதியடிகள், பிளாட்டினம் எடிசன் என்பதை காட்டும் வகையில் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட சில் பிளேட்டுகள் ஆகியவையும் கூடுதல் சிறப்பாக கூறலாம்.

இதர அம்சங்கள்

இதர அம்சங்கள்

போர்ஷே தொடர்பு தொழில்நுட்பமும், 7 அங்குல திரை கொண்ட இன்போடெயின்மென்ட் சிஸ்டம், 235 வாட் திறன் கொண்ட 11 ஸ்பீக்கர்கள் கொண்ட ஆடியோ சிஸ்டம் ஆகியவையும் இந்த சிறப்பு பதிப்பில் இடம்பெற்றுள்ளன.

 எஞ்சின்

எஞ்சின்

இந்த எஸ்யூவியில் 300 எச்பி ஆற்றலை அளிக்கும் வி6 பெட்ரோல் எஞ்சின் மற்றும் 245 எச்பி ஆற்றலை அளிக்கும் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. 8 ஸ்பீடு ட்ரிப்ட்ரோனிக் டிரான்ஸ்மிஷன் பொருத்தப்பட்டுள்ளது.

விலை

விலை

போர்ஷே கேயென் பிளாட்டினம் எடிசன் எஸ்யூவியின் பெட்ரோல் மாடல் 66,379 யூரோ விலையிலும், டீசல் மாடல் 67,212 யூரோ விலையிலும் விற்பனைக்கு வந்துள்ளது. இந்தியாவில் விலை குறித்த எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. ஆனால் முன்பதிவு நடந்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன. டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் இந்த எஸ்யூவி அறிமுகம் செய்யப்பட உள்ளது.

Most Read Articles
English summary
Porsche Cayenne Platinum Edition, a special limited run Cayenne was announced for Europe earlier this week. Surprisingly, the special edition Cayenne has already been confirmed for India, with a launch scheduled for Feb 2014, at the Auto Show.
Story first published: Thursday, December 5, 2013, 10:50 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X