குவாட்ரிசைக்கிளை புதிய ரக வாகனமாக அங்கீகரித்த மத்திய அரசு!

By Saravana

குவாட்ரிசைக்கிள்களை புதிய வாகன வகையில் அதிகாரப்பூர்வமாக சேர்த்துள்ளது மத்திய அரசு.

குவாட்ரிசைக்கிள் என்ற சிறிய ரக நான்கு சக்கர வாகனங்களுக்கு அங்கீகாரம் வழங்குவது குறித்து பல்வேறு ஆலோசனைகளையும், பரிசீலனைகளையும் மத்திய நெடுஞ்சாலை போக்குவரத்து துறை அமைச்சகம் மேற்கொண்டது.

Bajaj RE 60

இந்த புதிய ரக வாகனங்களை அங்கீகரிக்கக்கூடாது என்று சில கார் தயாரிப்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில், பல்வேறு தடைகளை கடந்து இறுதியில் குவாட்ரிசைக்கிள்களை புதிய வாகன வகையில் சேர்த்து அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து, இந்த வகை வாகனங்களை சாலையில் இயக்குவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

நகர்ப்புறங்களில் மட்டுமே வர்த்தக ரீதியில் இந்த ரக வாகனங்களை இயக்குவதற்கு அனுமதிக்கப்படும். இன்னும் ஒரு மாதத்திற்குள் இதற்கான அறிவிப்பு வெளியிடப்படும். அறிவிப்பு வெளியிடப்பட்ட நாளிலிருந்து 6 மாதங்களுக்கு பின்னர் சாலையில் இயக்குவதற்கு குவாட்ரிசைக்கிள் வாகனங்கள் அனுமதிக்கப்படும்.

அடுத்த ஆண்டு மத்தியில் குவாட்ரிசைக்கிள் வாகனங்கள் சாலையில் இயக்குவதற்கு அனுமதிக்கப்படும் என்று தெரிகிறது. ஆட்டோரிக்ஷாவுக்கு மாற்றான நான்கு சக்கர வாகனமாக இந்த குவாட்ரிசைக்கிள்கள் இருக்கும்.

Most Read Articles
English summary
The government has officially recognized quadricycles as a new segment of vehicles. The clearance for the new segment comes after several months of negotiation and through review, based on suggestions from experts and the public. The quadricycle segment was approved by the Road Transport and Highways Ministry on Monday.
Story first published: Thursday, December 26, 2013, 11:28 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X