ரெனோ டஸ்ட்டரின் புதிய கான்செப்ட் மாடல் அறிமுகம்

படு அசத்தலான டஸ்ட்டர் கான்செப்ட் மாடலை தென் ஆப்ரிக்க ரெனோ நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. ஜோகனஸ்பர்க் நகரில் நடந்து வரும் சர்வதேச ஆட்டோமொபைல் கண்காட்சியில் இந்த கார் தற்போது பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வரும் இந்த புதிய கான்செப்ட் மாடல் உலகம் முழுவதும் இருக்கும் டஸ்ட்டர் பிரியர்களை வாயூற வைத்துள்ளது. கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

 டிசைன்

டிசைன்

டஸ்ட்டர் டீடூர் கான்செப்ட்டை ரெனோவின் ஐரோப்பிய டிசைன் சென்டரும், தென் ஆப்ரிக்காவை சேர்ந்த பிரபல டிசைன் நிறுவனமும் இந்த டஸ்ட்டர் டீடூர் கான்செப்ட்டை உருவாக்கியுள்ளன.

தோற்றம்

தோற்றம்

முன்புறம் பல்வேறு மாற்றங்களை கண்டிருக்கிறது. கூரை விளக்குகள், பகல்நேர ரன்னிங் விளக்குகளுடன் கூடிய ஹெட்லைட், கிரில், கூடுதல் பனி விளக்குகள் கொண்ட நட்ஜ் கார்டு, இரட்டணை வண்ணக் கலவை கொண்ட 18 இஞ்ச் அலாய் வீல்களும், டின்டட் கண்ணாடிகள் ஆகியவை டஸ்ட்டர் டீடூரின் அழகையும், கம்பீரத்தையும் பன்மடங்கு கூட்டுகின்றன.

பின்புற மாற்றம்

பின்புற மாற்றம்

அசத்தலான எல்இடி டெயில் லைட்டுகள், இரண்டு புகை போக்கி குழாய்கள், இரட்டை வண்ண பெயின்ட்டிங் ஆகியவற்றுடன் ஆல் டெர்ரெய்ன் டயர்களும் பொருத்தப்பட்டுள்ளன.

உற்பத்தி நிலையை எட்டுமா?

உற்பத்தி நிலையை எட்டுமா?

இந்த புதிய கான்செப்ட் உற்பத்தி நிலைக்கு கொண்டு செல்லப்படுவது குறித்த தகவல் இல்லை. அதேவேளை, எதிர்காலத்தில் இந்த கான்செப்ட்டை உற்பத்தி நிலைக்கு கொண்டு செல்வது குறித்து ரெனோ பரிசீலிக்கும் வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தென் ஆப்ரிக்க பிரவேசம்

தென் ஆப்ரிக்க பிரவேசம்

தென் ஆப்ரிக்க மார்க்கெட்டில் கடந்த மாதம்தான் டஸ்ட்டர் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. அடுத்த ஒரு மாதத்தில் இந்த புதிய டஸ்ட்டர் கான்செப்ட் அங்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்திய தயாரிப்பு

இந்திய தயாரிப்பு

சென்னை ஆலையிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் டஸ்ட்டர்தான் தென் ஆப்ரிக்க மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும், உலக அளவில் சென்னை ஆலையில் மட்டும்தான் வலதுபக்க டிரைவிங் கொண்ட டஸ்ட்டர் உற்பத்தி செய்யப்படுகிறது.

Most Read Articles
English summary
French car maker Renault's South African susidiary has unveiled Duster detour concept at the ongoing Johannesburg International Motor Show (JIMS 2013).
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X