ரூ.8.99 லட்சத்தில் ஆட்டோமேட்டிக் ஸ்காலா அறிமுகம்

ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் வசதியுடன் ஸ்காலா செடான் காரை ரெனோ அறிமுகம் செய்துள்ளது. ஆர்எக்ஸ்எல் வேரியண்ட் ரூ.8.99 லட்சம் ஆரம்ப விலையிலும், ஆர்எக்ஸ்இசட் வேரியண்ட் ரூ.9.89 லட்சம் விலையிலும் விற்பனைக்கு வந்திருக்கிறது. மேனுவல் டிரான்ஸ்மிஷன் வசதிகொண்ட ஆர்எக்ஸ்இசட் வேரியண்ட் ரூ.9.60 லட்சத்தில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் வசதி கொண்ட ஆர்எக்ஸ்இசட் வேரியண்ட் வெறும் ரூ.29,000 கூடுதல் விலையை நிர்ணயித்து ரூ.9.89 லட்சம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனால், வாடிக்கையாளர்களை எளிதாக கவர முடியும் என்ற நம்பிக்கையில் விலை நிர்ணயம் செய்துள்ளது ரெனோ. ஆட்டமேட்டிக் ஸ்காலா லிட்டருக்கு 17.97 கிமீ மைலேஜ் தரும் என ரெனோ தெரிவித்துள்ளது. ஸ்லைடரில் ஸ்காலா ஓர் நினைவூட்டல் ரிவியூ...!!

 ஸ்காலா முகப்பு

ஸ்காலா முகப்பு

குரோம் பூச்சுடன் ரேடியேட்டர் கிரில், கரும்புகை பூச்சுடன் கூடிய ஹெட்லைட், பனி விளக்குகள், டூவல் டோன் பம்பர் ஆகியவை நிசான் சன்னியை காட்டிலும் ஸ்காலாவின் முன்பக்கத்துக்கு கூடுதல் வசீகரத்தை கொடுக்கிறது.

பின்புற டிசைன்

பின்புற டிசைன்

பின்புறத்தில் டூவல் டோன் ரியர் பம்பர், டேஞ்சர் விளக்குகளின் ஊடே குரோம் பினிஷிங் ஆகியவை நிசான் சன்னியிலிருந்து ஸ்காலாவை வேறுபடுத்தும் அம்சங்கள்.

இன்டிரியர்

இன்டிரியர்

ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல், லெதர் இருக்கைகள், பின்புற ஏசி வென்ட்டுகள் என உட்புறத்தை பார்த்தால் வசதிகளும், தரமும் என நிரம்பியிருக்கிறது. புளூடூத், ஆக்ஸ் போர்ட் வசதிகள் கொண்ட எம்பி3 பிளேயரும் உண்டு. கியர் நாப் மற்றும் ஸ்டீயரிங் வீல் லெதர் உறையால் சூழப்பட்டுள்ளது.

உள்ளலங்காரம்

உள்ளலங்காரம்

ஸ்கேலாவின் உட்புறத்தில் பெரும்பாலான பகுதிகள் லெதர் அப்ஹோல்ஸ்டரி அலங்கரிக்கிறது. இது கூடுதல் பிரிமியம் லுக்கை ஸ்கேலாவுக்கு வழங்குகிறது. நிசான் சன்னியுடன் ஒப்பிடுவதை விட பிற போட்டியாளர்களான ஸ்கோடா ரேபிட், டொயோட்டா எட்டியோஸ் உள்ளிட்ட கார்களின் உள்ளலங்காரத்தை விட ஸ்காலாவின் உள்ளலங்காரம் சிறப்பாகவே உள்ளது.

கப் ஹோல்டர்

கப் ஹோல்டர்

சென்ட்ரல் கன்சோலுக்கும், கியர் லிவருக்கு இடையில் சிறிய பாட்டில்களை வைத்துக்கொள்ளும் கப் ஹோல்டர் இருக்கிறது. இதேபோன்று, பின்புற ஆர்ம் ரெஸ்ட்டிலும் 2 பாட்டில்களை வைத்துக்கொள்ள வசதி இருக்கிறது.

பாதுகாப்பு

பாதுகாப்பு

இதன் பேஸ் வேரியண்ட்டில் கூட டிரைவர் பக்கம் ஏர்பேக், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் ஸ்டான்டர்டு ஆக்சஸெரீயாக உள்ளது. மேலும், திருடு போவதை தடுக்கும் அலார்ம் வசதி, வேகத்துக்கு ஏற்ப கதவுகளை தானியங்கி முறையில் மூடும் வசதிகளும் உண்டு.

எஞ்சின்

எஞ்சின்

97 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 84.8 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் கே9கே டீசல் எஞ்சின் மாடல்களில் கிடைக்கிறது. தற்போது சிவிடி ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் கூடிய பெட்ரோல் மாடலிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சம் மணிக்கு 160 கிமீ வேகம் செல்லத்தக்க ஆற்றல் கொண்டது.

Most Read Articles
English summary
Renault India has launched the Scala CVT in India. The automatic Renault Scala has been named as the X-Tronic and will be available in two variants. The entry level Scala CVT is the RxL which is priced at INR 8.99 lakhs and the top end RxZ is available with a price tag of INR 9.89 lakhs.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X