அக்டோபரில் ராயல் என்ஃபீல்டின் கான்டினென்டல் ஜிடி!

அக்டோபரில் ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் புத்தம் புதிய மாடலான கான்டினென்டல் ஜிடி விற்பனைக்கு வருகிறது. அடுத்த மாதம் முதலாவதாக இங்கிலாந்து மார்க்கெட்டில் இந்த புத்தம் புதிய மோட்டார்சைக்கிள் விற்பனைக்கு வர இருக்கிறது.

கஃபே ரேஸர் ரகத்தை சேர்ந்த இந்த மோட்டார்சைக்கிள் மாடல் உலக அளவில் பல்வேறு மார்க்கெட்டுகளில் விற்பனை செய்யப்பட உள்ளது. மிட் சைஸ் பைக் மார்க்கெட்டில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் டிசைன் மற்றும் பவர்ஃபுல் எஞ்சினுடன் இந்த புதிய மோட்டார்சைக்கிள் விற்பனைக்கு வருகிறது.

எஞ்சின்

எஞ்சின்

இந்த மோட்டார்சைக்கிளில் 30 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் திறன் கொண்ட 535சிசி எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். இங்கிலாந்தை சேர்ந்த ஹாரிஸ் எஞ்சினியரிங் நிறுவனத்துடன் இணைந்து இந்த புதிய எஞ்சினை வடிவமைத்துள்ளது ராயல் என்ஃபீல்டு.

தோற்றம்

தோற்றம்

இருக்கை, பெட்ரோல் டேங்க், ஹேண்டில்பார், வட்ட வடிவ ஹெட்லைட் ஆகியவை முற்றிலும் புதிய ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிளாக வேறுபடுத்துகின்றன.

டிஸ்க் பிரேக்

டிஸ்க் பிரேக்

முன் சக்கரம் மற்றும் பின் சக்கரத்தில் டிஸ்க் பிரேக்குகள் பொருத்தப்பட்டிருக்கும். பயோலி ஷாக்அப்சார்பர்கள், பைரெலி டயர்கள் ஆகியவையும் இந்த புதிய மோட்டார்சைக்கிளுக்கு கூடுதல் வலு சேர்க்கின்றன.

எதிர்பார்க்கும் விலை

எதிர்பார்க்கும் விலை

கஃபே ரேஸருக்கான கிட் வாங்கி மாற்றுவதற்கு ஆகும் செலவை விட சிறிது குறைவான விலையில் இந்த மோட்டார்சைக்கிளை அறிமுகப்படுத்த ராயல் என்பீல்டு திட்டமிட்டுள்ளது. ரூ.2.25 லட்சம் விலையில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுதான் ராயல் என்ஃபீல்டின் விலையுயர்ந்த மாடலாக இருக்கலாம்.

சென்னையில் உற்பத்தி

சென்னையில் உற்பத்தி

சென்னை, ஒரகடத்தில் சமீபத்தில் திறக்கப்பட்ட ராயல் என்ஃபீல்டின் புதிய ஆலையில் இந்த மோட்டார்சைக்கிள் உற்பத்தி செய்யப்பட உள்ளது.

வெயிட்டிங் பீரியட்

வெயிட்டிங் பீரியட்

புதிய ஆலை திறக்கப்பட்டிருப்பதால், ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் உற்பத்தி திறன் வெகுவாக அதிகரித்துள்ளது. எனவே, இந்த மோட்டார்சைக்கிளை முன்பதிவு செய்வோர் விரைவாகவே டெலிவிரி பெறும் வாய்ப்புள்ளது.

Most Read Articles
English summary
Royal Enfield has reconfirmed what it had already said earlier. India's marquee two wheeler manufacturer will launch its new flagship product, the Continental GT Cafe Racer in September in the U.K. India launch will follow in October.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X