பெங்களூரில் ஸ்கானியாவின் புதிய ஆலை திறப்பு: பஸ், டிரக் உற்பத்திக்கு ரெடி

பெங்களூரில் அமைக்கப்பட்டிருக்கும் புதிய ஸ்கானியா பஸ் ஆலையை கர்நாடக முதல்வர் சித்தராமையா நேற்று துவங்கி வைத்தார். இந்த விழாவில் மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர் ஆஸ்கர் பெர்னான்டஸ் மற்றும் ஸ்கானியாவின் சர்வதேச தலைவர் மார்டின் லன்ஸ்டெட் ஆகியோவர் பங்கேற்றனர்.

வால்வோவுக்கு போட்டியாக இன்டர்சிட்டி சொகுசு பஸ்களையும், ஹாலேஜ் டிரக்குகளையும் இந்த புதிய ஆலையில் ஸ்கானியா உற்பத்தி செய்ய உள்ளது.

ஸ்கானியா வர்த்தகம்

ஸ்கானியா வர்த்தகம்

2007ம் ஆண்டு முதல் இந்தியாவில் எல் அண்ட் டி நிறுவனத்துடன் கூட்டணி அமைத்து டிரக்குகளை இறக்குமதி செய்து ஸ்கானியா விற்பனை செய்து வந்தது. 2011ம் ஆண்டு முதல் இந்திய கனரக வர்த்தக மார்க்கெட்டில் நேரடியாக களமிறங்கியது.

 புதிய ஆலை

புதிய ஆலை

பெங்களூர் அருகே நரசப்புராவில் ரூ.250 கோடி முதலீட்டில் புதிய ஆலையை ஸ்கானியா அமைத்துள்ளது. இந்த புதிய ஆலையில் ஆண்டுக்கு 2500 டிரக்குகளையும், 1,000 இன்டர்சிட்டி சொகுசு பஸ்களையும் தயாரிக்க முடியும்.

சொகுசு பஸ்

சொகுசு பஸ்

ஸ்கானியாவின் சொகுசு பஸ் மாடல்கள் வால்வோவின் இன்டர்சிட்டி சொகுசு பஸ்களுக்கு நேரடி போட்டியாக இருக்கும். இரண்டும் ஸ்வீடன் நாட்டை சேர்ந்த நிறுவனங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 டிரக்

டிரக்

இந்திய சூழ்நிலைகளுக்கு ஏற்ப டிரக்குகளில் தொழில்நுட்பம் மற்றும் டிசைன் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக ஸ்கானியா தெரிவித்துள்ளது. தற்போது சோதனை கட்டமாக டிரக் உற்பத்தி துவங்கப்பட்டுவிட்டதாக தெரிவித்துள்ளது. அடுத்த ஆண்டு துவக்கத்தில் சொகுசு பஸ் உற்பத்தி துவங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு

இந்த புதிய ஆலையின் மூலம் 800 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வர்த்தக தேவையை பொறுத்து இந்த ஆலையின் உற்பத்தி திறனை அதிகரித்துக் கொள்ளவும் ஸ்கானியா திட்டமிட்டுள்ளது.

 முதல் ஆசிய ஆலை

முதல் ஆசிய ஆலை

ஆசியாவில் ஸ்கானியா அமைத்திருக்கும் முதல் ஆலை இதுவாகும். மேலும், இந்திய மார்க்கெட்டில் கூடிய விரைவில் முக்கிய இடத்தை பிடிப்போம் என்றும் ஸ்கானியா நம்பிக்கை தெரிவித்துள்ளது.

வீடியோ

ஸ்கானியா ஆலை வீடியோ.

ஃபோக்ஸ்வேகன் பங்கு

ஃபோக்ஸ்வேகன் பங்கு

ஸ்வீடனை சேர்ந்த ஸ்கானியாவில் 45.66 சதவீத பங்குகளும், 70.94 சதவீத ஓட்டுரிமையும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
English summary
Scania Commercial Vehicles India today announced plans to manufacture about 2,500 heavy haulage trucks besides 1,000 inter-city buses and coaches annually at its facility in Narasapura near Bangalore.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X