பைக்ஸ் பீக் மலையேற்ற கார் பந்தயத்தில் புதிய உலக சாதனை!

அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் உள்ள மிக உயரமான கொலராடோ ஸ்பிரிங்ஸ் மலையில் ஆண்டுதோறும் பைக்ஸ் பீக் என்ற மலையேற்ற கார் பந்தயம் நடந்து வருகிறது. உலக அளவில் மிக பிரபலமான இந்த போட்டியில், பிரபல அணிகள் கலந்து கொள்கின்றன. இந்த ஆண்டுக்கான போட்டி கடந்த ஞாயிறன்று நடந்தது.

இதில், ரெட்புல்-பீஜோ அணியின் செபாஸ்டின் லோப் முதலிடம் பிடித்ததோடு, புதிய உலக சாதனையையும் நிகழ்த்தினார். அவர் 8:13:878 நிமிடங்களில் பந்தய தூரத்தை கடந்து அனைவரையும் வியக்க வைத்திருக்கிறார். கடந்த ஆண்டு ரைஸ் மில்லன் என்ற வீரர் 9:46.181 நிமிடங்களில் பந்தய தூரத்தை கடந்ததே இதுவரை சாதனையாக இருந்தது.

 பந்தய தூரம்

பந்தய தூரம்

பைக்ஸ் பீக் மலையேற்ற கார் பந்தய போட்டியின் பந்தய தூரம் 19.98 கிமீ.

பீஜோ கார்

பீஜோ கார்

செபாஸ்டின் லோப் பயன்படுத்திய பீஜோ 208 டி16 காரின் எஞ்சின் 875 பிஎச்பி சக்தியை வழங்கும் திறன் கொண்டது.

சீறிய செபாஸ்டின்

சீறிய செபாஸ்டின்

ஏற்றங்களும், வளைவுகளும் நிறைந்த மலைச் சாலையில் சராசரியாக மணிக்கு 140 கிமீ வேகத்தில் செபாஸ்டின் காரை செலுத்தி வெற்றி பெற்றுள்ளார்.

உலக சாதனை

உலக சாதனை

பைக்ஸ் பீக் மலையேற்ற கார் பந்தயத்தில் 9 நிமிடங்களுக்கும் குறைவான நேரத்தில் பந்தய தூரத்தை கடந்தது மிகப் பெரும் சாதனையாக பார்க்கப்படுகிறது.

செபாஸ்டியன் கருத்து

செபாஸ்டியன் கருத்து

இந்த சாதனை குறித்து பிரான்ஸ் வீரரான செபாஸ்டியன் குறிப்பிடுகையில்,"ஆரம்பம் முதல் கடைசி வரை எனது கார் சிறப்பாக செயல்பட்டது. எந்த ஒரு தவறையும் நான் செய்யவில்லை. என்னுடைய ரேஸ் வாழ்வில் மிகவும் நல்ல பந்தயமாக இதனை கருதுகிறேன்," என்றார்.

 இரண்டாவது இடம்

இரண்டாவது இடம்

கடந்த ஆண்டு சாம்பியனான ரைஸ் மில்லன் இந்த ஆண்டு போட்டியில் பந்தய தூரத்தை 9:02.192 நிமிடங்களில் கடந்து இரண்டாவது இடத்தை பிடித்தார். அவர் ஹூண்டாய் பிஎம்580டி காரை பயன்படுத்தினார். அவர் மணிக்கு சராசரியாக 128.22 கிமீ வேகத்தில் காரை செலுத்தினார்.

மூன்றாவது இடம்

மூன்றாவது இடம்

பிரான்சை சேர்ந்த ஜீன் பிலிப் டேரவுத் பந்தய தூரத்தை 9:42.740 நிமிடங்களில் கடந்து மூன்றாவது இடம் பிடித்தார்.

டேரவுத் கார்

டேரவுத் கார்

மூன்றாம் இடம் பிடித்த டேரவுத் மினி கன்ட்ரிமேன் காரை பயன்படுத்தியிருந்தார்.

Most Read Articles
English summary
On Sunday, June 30 in Colorado Springs, Colorado, USA, French racing driver Sebastian Loeb proved to the world how much experience counts. The nine time World Rally Champion set a new world record time by completing Pikes Peak International Hill Climb in 8:13:878. To understand the magnitude of the achievement, you should know that the previous record time, set during the 2012 PPIHC, was 9:46.181, by Rhys Millen.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X