ஷெல் ஈக்கோ மாரத்தான்... தமிழகத்திலிருந்து 4 மாணவர் அணிகள் மணிலா செல்கிறது!

By Saravana

2014 ஷெல் ஈக்கோ மாரத்தான் ஏசியா மைலேஜ் சவால் போட்டியில் பங்கேற்பதற்காக தமிழக கல்லூரிகளை சேர்ந்த 4 அணிகள் செல்கின்றன. அதிக எரிபொருள் சிக்கனம் தரும் வாகனங்களை வடிவமைப்பதற்காக ஷெல் ஆயில் நிறுவனம் ஆண்டுதோறும் சர்வதேச அளவில் பொறியியல் மாணவர்களுக்கான மைலேஜ் சவால் போட்டியை நடத்துகிறது.

ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் ஆசிய அளவில் இந்த போட்டிகள் நடத்தப்படுகின்றன. ஆசிய அளவில் வரும் பிப்ரவரி மாதம் நடைபெற இருக்கும் 5வது ஷெல் மாரத்தான் போட்டி பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நடைபெற உள்ளது. இதில், மற்ற மாநிலங்களைவிட தமிழகத்தில் இருந்து 4 அணிகள் தேர்வு செய்யப்பட்டு பங்கு பெற உள்ளன.

 அணிகள் விபரம்

அணிகள் விபரம்

இந்த போட்டியில் பங்கேற்பதற்காக இந்தியாவிலுள்ள முன்னணி கல்வி நிறுவனங்களை சேர்ந்த 17 அணிகள் செல்கின்றன. இதில், பிற மாநிலங்களைவிட தமிழகத்தில் இருந்து அதிகபட்சமாக 4 அணிகள் இடம்பெற்றுள்ளன. அடுத்ததாக கர்நாடகாவில் இருந்து 3 அணிகள் பங்கு பெற உள்ளன.

பத்திரிக்கையாளர் சந்திப்பு

பத்திரிக்கையாளர் சந்திப்பு

பெங்களூரில் நடந்த இதற்கான பத்திரிக்கையாளர் சந்திப்பில் இந்தியா சார்பில் பங்கேற்கும் அணிகள் விபரம் உள்ளிட்டவை வெளியிடப்பட்டன. அதில், இடம்பெற்றுள்ள தமிழக கல்வி நிறுவனங்களின் அணிகள் விபரம் அடுத்த ஸ்லைடரில் காணலாம்.

தமிழக அணிகள்

தமிழக அணிகள்

சென்னை தொழில்நுட்ப நிறுவனத்திலிருந்து எம்ஐடி ஈக்கோ வாரியர்ஸ் மற்றும் எம்ஐடி க்ரூஸர்ஸ் என்ற இரு அணிகளும், எஸ்ஆர்எம் பல்கலைகழகத்தை சேர்ந்த இன்ஃபியோன் சூப்பர்மைலேஜ் என்ற அணியும், வேலூரிலுள்ள விஐடி பல்கலைகழகத்தின் சார்பில் டீம் ஈக்கோ டைட்டான் அணியும் பங்கேற்கின்றன. இதில், எம்ஐடி ஈக்கோ வாரியர்ஸ் அணி பேட்டரி எலக்ட்ரிக் வாகன பிரிவிலும், பிற மூன்று அணிகளும் பெட்ரோல் வாகன பிரிவிலும் பங்கேற்கின்றன.

வாகன வகை

வாகன வகை

புரோட்டோடைப் மற்றும் அர்பன் கான்செப்ட் என்ற இரு வகைகளில் வாகனங்கள் பிரிக்கப்பட்டு போட்டி நடத்தப்படும். மேலும், பெட்ரோல், டீசல், எத்தனால், மாற்று எரிபொருள், எலக்ட்ரிக், ஹைட்ரஜன் மற்றும் சூரிய சக்தி மின்சாரத்தை பெறும் வசதி கொண்ட பேட்டரி எலக்ட்ரிக் உள்ளிட்ட எரிபொருளில் இயங்கும் வகையிலான வாகனங்கள் பங்கேற்க அனுமதிக்கப்படும்.

 போட்டி விதிமுறை

போட்டி விதிமுறை

ஒரு லிட்டர் பெட்ரோல் அல்லது ஒரு kWh மின்சாரத்தில் அதிக தூரம் செல்லும் வாகனம் வெற்றி பெறும். இதற்காக, பல்வேறு விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.

 கடும் போட்டி

கடும் போட்டி

ஆசிய மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் கல்வி நிறுவனங்களை சேர்ந்த 140 மாணவர் அணியினர் இந்த போட்டியில் பங்கேற்க உள்ளனர். எனவே, இந்த போட்டி மிகவும் சவால் நிறைந்ததாக இருக்கும்.

அணிகள் முழு விபரம்

அணிகள் முழு விபரம்

இந்தியாவிலிருந்து ஷெல் மாரத்தான் போட்டியில் பங்கேற்கும் அணிகளின் பற்றிய முழு விபரம் படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

Most Read Articles
English summary
At an event organised by Shell in Bangalore, 17 student teams from India, from 15 different universities & institutes across India were given a send-off to compete in the fifth annual Shell Eco Marathon Asia competition.
Story first published: Thursday, December 12, 2013, 11:09 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X