ஸ்கோடா ரேபிட் ஹேட்ச்பேக் காரின் படங்கள் மற்றும் தகவல்கள்!

செக் குடியரசை சேர்ந்த ஸ்கோடா நிறுவனத்திடமிருந்து அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் மாடல் ரேபிட் ஸ்பேஸ்பேக். அடிக்கடி ரகசிய சோதனை படங்கள் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது இந்த காரின் அதிகாரப்பூர்வ படங்கள் வெளியாகியுள்ளன.

ரேபிட் செடான் காரின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த கார் பார்ப்பதற்கு எஸ்டேட் ரகத்தை போன்று இருந்தாலும், இந்த காரை காம்பெக்ட் காராக வர்ணிக்கிறது ஸ்கோடா. மேலும், ஹேட்ச்பேக் கார்கள் போன்று பயன்பாட்டுக்கு ஏற்றதாக இருக்கும் என்று ஸ்கோடா தெரிவிக்கிறது.

அழகூட்டுவது...

அழகூட்டுவது...

இந்த காரின் அழகை கூட்டுவது பானரோமிக் டின்டட் கிளாஸ் கொண்டு மூடப்பட்டுள்ள கூரைதான். பின்புற கண்ணாடியும் அதே டின்டட் கிளாஸ் மூலம் இணைக்கப்பட்டிருக்கிறது.

டிசைன்

டிசைன்

4,483 மிமீ நீளம் கொண்ட இந்த கார் செடான் வெர்ஷனைவிட சிறிது நீளம் குறைவாக இருக்கிறது. எனவே, இதன் பூட் ரூம் சிறிது குறைவான இடவசதியை கொண்டிருக்கும். இந்த காரின் பூட் ரூம் 415 லிட்டர் கொள்ளளவு கொண்டது. பின் இருக்கைகளை மடக்கினால் பொருட்கள் வைப்பதற்கு 1,380 லிட்டர் கொள்ளளவுக்கு இடவசதி கிடைக்கும்.

எஞ்சின்

எஞ்சின்

சர்வதேச மார்க்கெட்டில் 4 வித பெட்ரோல் மற்றும் 2 விதமான டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. இந்த எஞ்சின்கள் 73 எச்பி முதல் 120 எச்பி வரையிலான சக்தியை வெளிப்படுத்துவதாக இருக்கும்.

 இன்டிரியர்

இன்டிரியர்

ஸ்கோடா ரேபிட் செடான் காரில் இருக்கும் அதே இன்டிரியருடன் இந்த காரும் வெளிவருகிறது.

 அறிமுகம்

அறிமுகம்

செப்டம்பரில் நடைபெற இருக்கும் பிராங்ஃபர்ட் மோட்டார் ஷோவில் இந்த கார் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

Most Read Articles
English summary
The Rapid Spaceback was long expected from the Czech automaker following several spyshots. The first official images of the estate version of the Rapid sedan is now here, ahead of its September global reval at Frankfurt Auto Show.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X