புதிய ஆக்டாவியாவின் உற்பத்தி துவங்கியது: விரைவில் டெலிவிரி

பெரும் வரவேற்பை பெற்ற மாடலாக திகழ்ந்த ஆக்டாவியாவின் புதிய தலைமுறை மாடலின் உற்பத்தியை இந்தியாவில் மீண்டும் துவங்கியிருக்கிறது ஸ்கோடா ஆட்டோ. அடுத்த மாதம் விற்பனைக்கு வர இருக்கும் இந்த புதிய கார் பழைய மாடலைவிட பல படிகள் முன்னேறியிருக்கிறது.

யூரோ என்சிஏபி கிராஷ் டெஸ்ட்டில் 5 நட்சத்திர தர அந்தஸ்து பெற்ற இந்த புதிய ஆக்டாவியாவைய, ப்ளாப் மாடலாக பெயர் பெற்ற லாராவுக்கு மாற்றாக மூன்று ஆண்டுகள் கழித்து மீண்டும் அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த புதிய கார் மீண்டும் இந்திய மார்க்கெட்டில் ஒரு ரவுண்டு வரும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

அவுரங்காபாத்தில் உற்பத்தி

அவுரங்காபாத்தில் உற்பத்தி

அவுரங்காபாத்தில் உள்ள ஸ்கோடா ஆட்டோ ஆலையில் புதிய ஆக்டாவியா காரின் உற்பத்தி நேற்று துவங்கப்பட்டது. பண்டிகை காலத்தில் இந்த கார் முறைப்படி விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

பிளாட்பார்ம்

பிளாட்பார்ம்

ஸ்கோடாவின் தாய் நிறுவனமான ஃபோக்ஸ்வேகனின் எம்க்யூபி பிளாட்பார்ம் அடிப்படையில் உருவாக்கப்பட்ட புதிய பிளாட்பார்மில் இந்த புதிய கார் டிசைன் செய்யப்பட்டுள்ளது. ஸ்கோடாவின் விஷன் டி மற்றும் மிஷன் எல் ஆகிய கான்செப்ட் மாடல்களிலிருந்தும் சில டிசைன் தாத்பரியங்களை எடுத்து வடிவமைக்கப்பட்டுள்ளது.

கூடுதல் இடவசதி

கூடுதல் இடவசதி

இந்த காரின் ஒட்டுமொத்த நீளத்தில் 90 மிமீ., அகலத்தில் 45 மிமீ., வீல் பேஸில் 108 மிமீ., கூட்டப்பட்டிருக்கிறது. இதுதவிர, பின்புற இருக்கையின் கால் வைக்கும் அறை பகுதி 73 மிமீ., ஹெட்ரூம் 980 மிமீ அதிகரிக்கப்பட்டுள்ளதால், உட்புறத்தில் தாராள இடவசதி கிடைக்கும்.

விலை

விலை

ரூ.13 லட்சம் முதல் ரூ.14.5 லட்சம் வரையிலான ஆரம்ப விலையில் அறிமுகம் செய்யப்படலாம். இந்த கார் எண்ணற்ற புதிய வசதிகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களுடன் வருவதால் வாடிக்கையாளர்களை வெகுவாக கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

போட்டியாளர்

போட்டியாளர்

தற்போது எக்ஸிகியூட்டிவ் செடான் மார்கெட்டில் முன்னிலை வகித்து வரும் ஹூண்டாய் எலன்ட்ராவை எதிர்கொள்ள வருகிறது புதிய ஸ்கோடா ஆக்டாவியா.

Most Read Articles
English summary
The latest generation of the Skoda Octavia roll of the production lines at the Indian plant in Aurangabad; launch on the Indian market in autumn.
Story first published: Saturday, August 10, 2013, 10:08 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X