அடுத்து இந்தியாவில் களமிறங்கும் புதிய 'கோடீஸ்வர' கார் பிராண்டு !

By Saravana

நெதர்லாந்தை சேர்ந்த ஸ்பைக்கர் கார் நிறுவனம் தனது சூப்பர் கார் மாடல்களை இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது. இந்த ஆண்டு இறுதியில் ஸ்பைக்கர் கார்கள் இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது.

மேலும், தனது கார்களை இறக்குமதி செய்வதற்காக டெல்லியை சேர்ந்த டீலரை அங்கீகரிக்கப்பட்ட இறக்குமதியாளராக ஸ்பைக்கர் நியமித்துள்ளது. தற்போது அந்த நிறுவனத்திடம் சி8 அலிரோன் மற்றும் பி6 வெனேட்டர் ஆகிய இரண்டு கார் மாடல்கள் இருக்கின்றன. இந்த இரண்டு மாடல்களும் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று தெரிகிறது.

Spyker Super car

சி8 அலிரோன் காரில் 400 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும் 4.2 லிட்டர் எஞ்சினும், பி6 வெனேட்டரில் 375 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும் வி6 எஞ்சினும் பொருத்தப்பட்டு இருக்கும். கடந்த 2007ம் ஆண்டு ஃபார்முலா-1 கார் பந்தயத்தில் ஸ்பைக்கர் அணி பங்கேற்றது. இந்த அணிதான் தற்போது புதிய கைகளுக்கு மாறி சஹாரா ஃபோர்ஸ் இந்தியா என்றழைக்கப்படுகிறது.

Most Read Articles
English summary
Netherland based super car maker Spyker, is likely to make its India debut by the end of the year. A report from CarIndia says that the manufacturer has already appointed a Delhi based dealer to import its exotics into the country.
Story first published: Saturday, June 1, 2013, 11:58 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X