11 பேர் அமர்ந்து பயணம் செய்யும் வசதி கொண்ட டூரிஷ்மோ என்ற புதிய எம்பிவி காரை மஹிந்திரா கீழ் செயல்படும் சாங்யாங் மோட்டார்ஸ் அறிமுகம் செய்துள்ளது. சாங்யாங் ரோடியஸ் எம்பிவி காருக்கு மாற்று மாடலாக இந்த புதிய எம்பிவி கார் வந்துள்ளது. சியோல் நகரில் நடந்த வர்த்தக மையத்தின் வெள்ளி விழாவில் இந்த காரின் கஸ்டமைஸ் செய்யப்பட்ட மாடலையும் சாங்யாங் காட்சிக்கு வைத்திருந்தது.
பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்த இந்த பிரிமியம் எம்பிவி காரில் இடவசதி, தொழில்நுட்ப வசதிகள் நிறைந்து கிடக்கின்றன. சாங்யாங் தயாரிப்புகளை மஹிந்திரா நிறுவனம் ஒன்றன் பின் ஒன்றாக இந்தியாவில் அறிமுகம் செய்து வருகிறது. எனவே, அடுத்த ஓரிரு ஆண்டுகளில் இந்த புதிய எம்பிவி கார் இந்தியா வருவதற்கு அதிக வாய்ப்பிருக்கிறது. இதனை ஆனந்த் மஹிந்திராவும் டிவிட்டர் சமூக வலைதளத்தில் உறுதிப்படுத்தியிருக்கிறார். ஜெனீவா மோட்டார் ஷோவில் இந்த கார் பார்வைக்கு வைக்கப்பட உள்ளது. அதற்கு முன்பாகவே இந்த காரின் படங்களை ஸ்லைடரில் காணலாம்.









































