சுஸுகி எஸ் கிராஸ் எஸ்யூவி பற்றிய கூடுதல் தகவல்கள்!!

புத்தாண்டு தினத்தன்று ஆஸ்திரேலிய மார்க்கெட்டில் சுஸுகி எஸ் கிராஸ் எஸ்யூவி விற்பனைக்கு வருகிறது. இந்திய மதிப்பில் ரூ.13.2 லட்சம் விலையில் வரும் இந்த புதிய எஸ்யூவி இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

4.3 மீட்டர் நீளம் கொண்ட இந்த எஸ்யூவி சுஸுகியின் தற்போதைய எஸ்எக்ஸ்4 கிராஸ்ஓவரைவிட கூடுதல் அகலம் மற்றும் குறைவான உயரம் கொண்டது. மேலும், 100 கிலோ வரை எடை குறைந்துள்ளது. 1.6 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டிருப்பதுடன் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது சிவிடி ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் கொண்டதாக வருகிறது.

Suzuki S Cross

சிறப்பான இன்டியரியர் கொண்டதாக வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த எஸ்யூவி 16 இஞ்ச் அலாய் வீல்கள், க்ரூஸ் கன்ட்ரோல், ரூஃப் ரெயில், அட்ஜெஸ்ட்டபிள் ஸ்டீயரிங் என பல அம்சங்களை கொண்டிருக்கும்.

யூரோ என்சிஏபி கிராஷ் டெஸ்ட்டில் 5 ஸ்டார் ரேட்டிங் பெற்றிருக்கிறது. இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டால், ரெனோ டஸ்ட்டர், ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவி மாடல்களுடன் இது போட்டி போடும்.

Most Read Articles
English summary
Suzuki will be launching the new S-Cross in Australia on January 1, 2014. The car will be on sale for an attractive $23,990 (INR 13.2 lakhs). However, the Big Question is when would India receive the S-Cross compact SUV?
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X