இங்கிலாந்தில் 4 வீல் டிரைவ் ஸ்விப்ட் அறிமுகம்: சிறப்பம்சங்கள்

ஜப்பான் மற்றும் ஐரோப்பிய மார்க்கெட்டுகளில் மாருதியின் தாய் நிறுவனமான சுஸுகி ஏராளமான 4 வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட கார் மாடல்களை விற்பனை செய்கிறது. அந்த நிறுவனத்தின் 4 வீல் டிரைவ் கார்கள் விற்பனையில் நல்ல எண்ணிக்கையையும் பதிவு செய்து வருகிறது.

ஆனால், இந்தியாவில் கிராண்ட் விட்டாராவை தவிர வேறு மாடல்கள் சுஸுகி கைவசம் இல்லை. இந்த நிலையில், இந்திய வாடிக்கையாளர்களின் மிகவும் மனம் கவர்ந்த காராக திகழும் ஸ்விப்ட் ஹேட்ச்பேக் காரின் ஆஃப் ரோடு சாலைகளுக்கு ஏற்ற அம்சங்கள் மற்றும் 4 வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட மாடலை இங்கிலாந்தில் அறிமுகம் செய்துள்ளது சுஸுகி. அந்த காரின் சிறப்பம்சங்களை ஸ்லைடரில் காணலாம்.

கிரவுண்ட் கிளியரன்ஸ்

கிரவுண்ட் கிளியரன்ஸ்

நம் நாட்டு மார்க்கெட்டில் இருக்கும் ஸ்விப்ட் காரைவிட 25 மிமீ கூடுதல் கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டதாக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

4 வீல் டிரைவ் சிஸ்டம்

4 வீல் டிரைவ் சிஸ்டம்

ஆட்டோமேட்டிக் ஆல் வீல் டிரைவ் சிஸ்டத்துடன் இணைந்து, மேனுவல் டிரான்ஸ்மிஷன் பணியாற்றும் வகையில் தொழில்நுட்பம் பின்னப்பட்டுள்ளது.

விஸ்காஸ் கப்லிங் சிஸ்டம்

விஸ்காஸ் கப்லிங் சிஸ்டம்

முறுக்கு விசையை கடத்துவதற்காக முன்பக்க வீல்களுடன் பின்பக்க வீல்களை இணைக்கும் விஸ்காஸ் கப்லிங் சிஸ்டத்துடன் இயங்குகிறது.

 வேரியண்ட்கள்

வேரியண்ட்கள்

எஸ்இசட்3 மற்றும் எஸ்இசட்4 ஆகிய இரு வேரியண்ட்களில் கிடைக்கும்.

வேரியண்ட் அம்சங்கள்

வேரியண்ட் அம்சங்கள்

எஸ்இசட்3 வேரியண்ட்டில் 4 வீல் டிரைவ் சிஸ்டத்தை மட்டுமே கொண்டிருக்கும். எஸ்இசட்4 வேரியண்ட்டில் ஆஃப் ரோடு தகவமைப்புகளுக்கு ஏற்ற ரியர் ஸ்கிட் பிளேட், கருப்பு வீல் ஆர்ச், கருப்பு நிற சைடு ஸ்கர்ட், பகல் நேர ரன்னிங் விளக்குகள் ஆகியவற்றுடன் கிடைக்கும்.

 எடை கூடியது

எடை கூடியது

4 வீல் டிரைவ் சிஸ்டம் பொருத்தப்பட்டிருந்தாலும், சாதாரண ஸ்விப்ட் காரைவிட வெறும் 65 கிலோ மட்டுமே கூடுதல் எடை கொண்டதாக இருக்கிறது. மேலும், சாதாரண ஸ்விப்ட்டைவிட ஒரு கிலோ மீட்டருக்கான கார்பன் வெளியிடும் தன்மையும் 10 கிராம் மட்டுமே கூடுதல் என்பது இதன் சிறப்பு.

எஞ்சின்

எஞ்சின்

ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட ஸ்விப்ட் கார் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்ட மாடலில் மட்டுமே கிடைக்கும்.

எஸ்யூவி.,க்கு மாற்று

எஸ்யூவி.,க்கு மாற்று

ஊரக பகுதிகளில் எஸ்யூவி கார்களை விரும்பாதவர்களுக்கு இந்த சின்ன ஆல் வீல் டிரைவ் கார் சிறந்த தேர்வாக இருக்கும் என சுஸுகி தெரிவித்துள்ளது.

 விலை

விலை

இந்திய மதிப்பில் எஸ்இசட்3 வேரியண்ட் ரூ.10.44 லட்சம் விலையிலும், எஸ்இசட்3 வேரியண்ட் ரூ.11.89 லட்சம் விலையிலும் கிடைக்கும்.

அறிமுக சலுகை

அறிமுக சலுகை

அறிமுக சலுகையாக வரும் செப்டம்பர் 30 வரை இங்கிலாந்தில் வாட் வரி இல்லாமல் புதிய 4 வீல் டிரைவ் ஸ்விப்ட் கிடைக்கும் என சுஸுகி தெரிவித்துள்ளது. எஸ்இசட்3 வேரியண்ட் ரூ.10.44 லட்சத்திலும், எஸ்இசட்4 வேரியண்ட் ரூ.11.89 லட்சத்திலும் விற்பனைக்கு கிடைக்கும்.

Most Read Articles
English summary
Suzuki has a good history of selling all-wheel drive models across the world. In India though, the only 4X4 model offered by its subsidiary Maruti is the Suzuki Grand Vitara SUV, which does not happen to be a very popular model despite being a capable vehicle.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X