கூடுதல் வசதிகள், புதுப்பொலிவுடன் தமிழ் டிரைவ்ஸ்பார்க் தளம்!

Tamil Drivespark Revamped
கூடுதல் வசதிகள் மற்றும் புதுப்பொலிவுடன் தமிழ் டிரைவ்ஸ்பார்க் ஆட்டோமொபைல் தளம் மேம்படுத்தப்பட்டுள்ளது.

தமிழ் ஒன்இந்தியா தளத்தின் அங்கமாக செயல்பட்டு வரும் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் கார் மற்றும் பைக் மார்க்கெட்டின் அன்றாட நிகழ்வுகளை உடனுக்குடன் வாசகர்களின் பார்வைக்கு வழங்கி வருகிறது.

இந்த நிலையில், வாசகர்கள் செய்திகளை எளிதாக படிக்கும் விதத்தில் டிரைவ்ஸ்பார்க் தளத்தின் வடிவமைப்பும், செய்திப் பிரிவுகளும் மாற்றப்பட்டுள்ளன.

டாப் ஸ்லைடரில் கொடுக்கப்பட்டிருக்கும் 'ரியல் ரீல்' பகுதியில் வாகன மார்க்கெட்டின் யூகச் செய்திகளை அறிந்து கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. "கார் நியூஸ்" மற்றும் "பைக் நியூஸ்" பகுதிகளில் அன்றாட நிகழ்வுகள் குறித்த செய்திகளை பெறலாம். இதற்கு சம்பந்தப்பட்ட பகுதிகளின் மேல் மவுஸ் ஓவர் செய்தால் தேவையான செய்தியை தேர்வு செய்து கொள்ளலாம்.

கார்கள் மற்றும் பைக்குகளின் விலை விபரம், எஞ்சின் மற்றும் அனைத்து வசதிகள் பற்றிய தகவல்களை நொடிப் பொழுதில் அறிந்து கொள்ள 'கேரேஜ்' என்ற பிரிவை சொடுக்கினால் பெற முடியும்.

இதைத்தொடர்ந்து, கார் நியூஸ், பைக் நியூஸ் பகுதியில் 5 செய்திகளை உடனடியாக படிக்க முடியும். கூடுதல் தகவலுக்கு அந்த பகுதியை சொடுக்கினால் பிரத்யேக பக்கத்திற்கு சென்று அனைத்து செய்திகளையும் படிக்க முடியும்.

இதுதவிர, கார் மற்றும் பைக்குகள் பற்றிய சிறப்பு பார்வைகள் மற்றும் ஒப்பீடுகள் பற்றிய செய்திகளை "ரிவியூ கார்னர்" பகுதியில் சென்று வாசிக்கலாம். மேலும், டிரைவிங் மற்றும் பராமரிப்பு பற்றிய செய்திகளை "டிப்ஸ் கார்னர்" பகுதியில் வாசகர்கள் பெற முடியும்.

இதுதவிர, வாகனங்களின் பிரத்யேக படங்களையும் டிரைவ்ஸ்பார்க் தளத்தின் "படங்கள்" பகுதிக்கு சென்றால் அந்த ஏராளமான படங்களை ஸ்லைடு ஷோவில் கண்டு ரசிக்கலாம்.

டிரைவ்ஸ்பார்க் தளத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் புதிய பகுதிக்குள் எளிதாக செல்லும் வகையில் "ஸ்க்ரோலிங் ஹெட்டர்" கொடுத்திருக்கிறோம். இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

புதிய டிரைவ்ஸ்பார்க் தளத்தில் உங்களது அனுபவங்கள் மற்றும் கருத்துக்களை கருத்து பெட்டியில் பதிவு செய்யவும்.

புதிய டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்திற்கு செல்ல இங்கே சொடுக்கவும்

Most Read Articles
English summary
tamil.drivespark.com (Automobile wing of http://tamil.oneindia.com/) is front runner in providing automobile news in tamil. We take this opportunity to confirm that http://tamil.drivespark.com/ has received a facelift on the occasion of completing one successful year. We urge you to check out the refreshed look and please feel free to provide us your feedback.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X